For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது என்ன நியாயம்.. எப்பொழுதும் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள் தான்.. கொந்தளிக்கும் பொன்ராஜ்!

தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டை சரமாரியாக விளாசியுள்ளார் பொன்ராஜ்.

Google Oneindia Tamil News

சென்னை: அப்துல்கலாமின் அறிவியல் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்தவரும் அப்துல் கலாம் லட்சிய கட்சி தலைவருமான இருந்த பொன்ராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தேர்தல் ஆணையத்தை சரமாரியாக விளாசியுள்ளார்.

தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் எப்போதும் சாதாரண மக்கள்தான் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

Ponraj slams at Election commission for its action

"ஓட்டு போட பணம் கொடு ஒருபக்கம், மற்றொன்று பக்கம் பணம் கொடுத்தால் நடவடிக்கை, பறிமுதல் - தேர்தல் ஆணையத்தின் வெட்கக்கேடான நிலைப்பாடு சரியா??

ஓட்டு போட ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தொழில், வர்த்தக மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் உத்திரவு, இல்லை என்றால் நடவடிக்கை.

ஓட்டு போட விடுமுறை மற்றும் ஊதியம் - இதற்கு பெயர் என்ன???

உங்களுக்கு ஒரு நியாயம், சாதாரண மக்களுக்கு ஒரு நியாயமா?

சாதாரண மக்களுக்கு ஓட்டு போட பணம் கொடுப்பதை ஏன் தடுக்கிறீர்கள்?

ஊழலில் பணம் சேர்த்த அரசியல்வாதி சாதாரண மக்களுக்கு கொடுக்கிறான், அதை வாங்கி கொண்டு அரசியல் விழிப்புணர்ச்சியோடு ஓட்டு போடுங்கள் என்றல்லவா தேர்தல் ஆணையம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

ஓட்டு போட பணம் கொடுங்கள் என்று தனியார் நிறுவனத்திற்கு உத்திரவு போடும் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் மக்களுக்கு பணம் கொடுப்பதற்கு வழிவகை செய்ய வேண்டுமா இல்லையா??????

இது என்ன நியாயம்.... எப்பொழுதும் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள் தான்.

காசு வாங்கினாலும், காசு வாங்காவிட்டாலும் தேர்தலில் சரியான முடிவெடுப்பார்கள் தமிழக மக்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்???

சிந்திப்போம்...." இவ்வாறு பொன்ராஜ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

English summary
Ponraj slams at Election commission for its action. He posted comment on his facebook page that Election commissions actions affecting ordinary people only.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X