For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வர்தா புயல் எதிரொலி - மின் விநியோகம் துண்டிப்பு - மெழுகுவர்த்தி ரெடியா?

வர்தா புயல் கரையை கடக்கும் நேரத்தில் சென்னையில் மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வர்தா புயல் சென்னைக்கு மிக அருகே பழவேற்காடு - கும்மிடிப்பூண்டி இடையே இன்று பிற்பகலில் கரையை கடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை முதலே பலத்த காற்று வீசி வருவதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு பகுதியில் காற்று பலமாக வீசுவதால் மரங்களும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன.

Power cut forces people to go dark in Chennai and other cyclone hit areas

வர்தா புயல் கரையை கடக்கும் நேரத்தில் மிகவும் பலத்த காற்று வீசும் என்பதால் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குறைந்தது 6 மணி நேரம் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பல பகுதிகளில் காலை முதலே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்கம்பங்கள் முறியும் பட்சத்தில் மின்சார விநியோக தடை அதிகரிக்கக்கூடும் என்பதால் மெழுகுவர்த்தி, உணவுப்பொருட்கள், பிரட், பிஸ்கட் ஆகிய பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்போனை சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அவசர அழைப்புக்காக மட்டுமே செல்போனை பயன்படுத்துங்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

English summary
Power cut has forced people to stay in dark in Chennai and other cyclone hit areas due to the cyclone Vardah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X