For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்ல தலைவரை இழந்துவிட்டோம்.. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த பிரணாப் முகர்ஜி

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று மரியாதை நிமித்தமாக கோபாலபுரத்திற்கு ஸ்டாலினை சந்திக்க வந்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று மரியாதை நிமித்தமாக கோபாலபுரத்திற்கு ஸ்டாலினை சந்திக்க வந்துள்ளார்.

திமுக முன்னாள் தலைவரும், 5 முறை முதல்வருமாக இருந்த கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மரணம் அடைந்தார். இவரது இறுதி சடங்கிற்கு பல அரசியல் பிரபலங்கள் வந்து இருந்தனர். ஆனால் முன்னாள் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

Pranab Mukherjee went to Karunanidhi home, Met Stalin

உடல் நல குறைவு காரணமாக அவர் அப்போது வரவில்லை. இந்த நிலையில் பிரணாப் முகர்ஜி நேற்று மரியாதை நிமித்தமாக கோபாலபுரத்திற்கு வந்துள்ளார்.

நேற்று இரவு மறைந்த கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த அவர், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார். ஸ்டாலினை சந்தித்து சில நிமிடங்கள் உரையாடினார். மேலும் துரைமுருகனையும் சந்தித்து பேசினார்.

Pranab Mukherjee went to Karunanidhi home, Met Stalin

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பிரணாப் முகர்ஜி, "கருணாநிதி மறைவு இந்தியாவிற்கு பேரிழப்பு. அவர் இறந்த போது உடல்நல குறைவால் அந்த சமயத்தில் வர இயலவில்லை. எனக்கு 48 ஆண்டுகள் நல்ல நண்பராக இருந்தவர் கருணாநிதி.'' என்றார்.

ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தேன் என்றார். இன்று சென்னையில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளில் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்ள இருக்கிறார்.

English summary
Congress leader Pranab Mukherjee went to Karunanidhi home, Met DMK Chief Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X