பாஜக கூட்டணியில் சேரத் துடிக்கும் பிரேமலதா: கடுப்பில் தேமுதிக தொண்டர்கள்
சென்னை: பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நினைப்பது கட்சி தொண்டர்களை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க திமுகவும், பாஜகவும் நடையாய் நடந்து ஓய்ந்துவிட்டன. தேமுதிக தலைவர் விஜயகாந்தோ தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டார். விஜயகாந்தின் இந்த முடிவு தேமுதிக தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துது.
விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் கூட்டணி பற்றி பேசலாம் என்று பிரேமலதா தெரிவித்தது பாஜகவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

பிரேமலதா
தேர்தலில் தனியாக போட்டியிட வேண்டும் என்ற முடிவை விஜயகாந்த் அல்ல மாறாக பிரேமலதா தான் எடுத்தார் என்று கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தங்கள் கூட்டணிக்கு வருமாறு பாஜக தலைவர்கள் பிரேமலதாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

டெல்லி தலைவர்கள்
பாஜகவை சேர்ந்த டெல்லி தலைவர்கள் பிரமேலதாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவருக்கும் பாஜக கூட்டணியில் சேரவே விருப்பம் என்று கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த்
விஜயகாந்த் தன்னை அழைக்கும் மக்கள் நலக் கூட்டணியை தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைத்துள்ளார். பாஜக வர உள்ள கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தெரிவித்துவிட்டார்கள்.

குழப்பம்
விஜயகாந்திற்கு மக்கள் நலக் கூட்டணியை கைவிட விருப்பம் இல்லை. அதே சமயம் மத்தியில் ஆளும் பாஜகவையும் பகைக்க விரும்பவில்லை. இதனால் என்னை செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்.

அந்த அம்மா தான்
தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்தது பிரேமலதா தான். கட்சி முடிவுகளை அவர் தான் எடுக்கிறார். பாஜகவுடன் நெருக்கமாக இருக்கும் அவர் அந்த கூட்டணிக்கே செல்ல முடிவு செய்வார் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். பாஜக கூட்டணியில் தேமுதிக சேர்வதை தாங்கள் கொஞ்சமும் விரும்பவில்லை என்கின்றனர் தொண்டர்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications