பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்கக்கூடாது.. தனியார் பேருந்துகளுக்கு அரசு அறிவுறுத்தல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழக அரசு போக்குவரத்து நஷ்டத்தில் இயங்க என்ன காரணம் ? போராட்டம் எதனால் ?- வீடியோ

  சென்னை: பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்கக்கூடாது என சென்னையில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

  அரசின் ஊதிய உயர்வு ஒப்புதலை ஏற்க மறுத்து தமிழகம் முழுவதும் தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

  Private buses in Chennai not to charge from the passengers: Tamil Nadu government

  அண்ணா தொழிற்சங்க ஊழியர்களை கொண்டு மிகக்குறைந்த அளவிலான அரசுப்பேருந்துகளே இயக்கப்பட்டு வருகிறது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

  இந்நிலையில் சென்னையில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்கக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. தனியார் பேருந்துகளை இலவசமாக இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

  சென்னை கோயம்பேட்டில் இருந்து தாம்பரம், கிண்டி என பல்வேறு இடங்களுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The Tamil Nadu government has directed private buses operates in Chennai not to charge from the passengers. The Tamil Nadu government has instructed to operate private buses at free of cost.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற