For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்க குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்துட்டீங்களா?

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும் இன்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் நடந்தது.

தமிழகத்தில் மட்டும் இதற்காக 43,051 சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், சமுதாய நலக் கூடங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், முக்கிய இடங்கள், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள் என முக்கிய இடங்களில் இதற்கான மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறும். பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை உறுதி செய்ய இந்த முகாம் நடத்தப்படுகிறது.

Pulse polio drops camp held in TN

சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படுகிறது. இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

2வது தவணையாக மீண்டும் பிப்ரவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சொட்டு மருந்து கொடுக்கப்படும்.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீட்டில் இருந்தால் தவறாமல் சொட்டு மருந்து கொடுத்து விட்டு வாருங்கள்.

English summary
A nationwide pulse polio camp was organised today and there were 43,051 camps were set up in the state for the purpose.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X