For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஞ்சாப்பில் பாதிப் பேர் “கோடீஸ்வர” வேட்பாளார்கள் – கிறுகிறுக்கும் சொத்து மதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: பஞ்சாப் மக்களவை தேர்தலில் கட்சி வேறுபாடின்றி எல்லாக் கட்சிகளும் கோடீஸ்வரர்களை களத்தில் இறக்கியுள்ளன.பஞ்சாப்பில் மொத்தம் 13 மக்களவை தொகுதிகள் உள்ளன.

இவற்றில் மொத்தம் 253 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 56 வேட்பாளர்கள் "மகா" கோடீஸ்வரர்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக 13 மக்களவை தொகுதிகளிலும் ஏப்ரல் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

56 கோடீஸ்வரர்கள்:

அதனால் தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தில் நடக்கிறது. கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஆய்வு செய்ததில் 56 கோடீஸ்வரர்கள் போட்டியிடுவது தெரிய வந்துள்ளது.

கட்சி பூரா பணக்காரர்கள்:

ஆளும் கட்சியான அகாலி தளத்தைச் சேர்ந்த 10 வேட்பாளர்களும் அதன் கூட்டணி கட்சியான பாஜவில் 3 வேட்பாளர்களும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். காங்கிரசை பொறுத்தவரை ஒருவரைத் தவிர அனைத்து வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள். பகுஜன் சமாஜ் கட்சியை பொறுத்தவரை 6 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

கோடிக்கணக்கான சொத்து:

சிரோன்மணி அகாலிதளம் கட்சி சார்பாக போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 34.5 கோடி. அதேபோல காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 32.7 கோடி. ஆம் ஆத்மி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு சராசரி ரூபாய் 4.11 கோடி.

உயர்ந்துள்ள மதிப்பு:

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 1.46 கோடியாகும். 2009 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது ரூபாய் 1.66 கோடியாக இருந்த வேட்பாளர்களின் சொத்து மதிப்பு இப்போது ரூபாய் 4.48 கோடியாக உயர்ந்துள்ளது.

ரியல் எஸ்டேட் வேட்பாளர்கள்:

இதில் 16 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு சுமாராக 15 கோடிக்கு மேல் உயர்ந்து உள்ளது. இவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள். அகாலி தளத்தின் சார்பாக பதேகர் சாஹிப் தொகுதியில் போட்டியிடும் "குல்வந்த் சிங்" தான் வேட்பாளர்களிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர்.

ஹப்பா! முடியலை:

இவருடைய சொத்து மதிப்பு ரூபாய் 139.61 கோடி. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அம்பிகா சோனியின் சொத்து மதிப்பு ரூபாய் 118 கோடி பாஜக சார்பில் போட்டியிடும் அருண் ஜெட்லியின் சொத்து மதிப்பு ரூபாய் 113 கோடி.

சூப்பர் ஸ்டாரின் சொத்து:

பதிந்தா தொகுதியின் தற்போதைய எம்பியும் அகாலி தள வேட்பாளரான சிம்ரத் கரூர் பாதலின் சொத்து மதிப்பு ரூபாய் 108 கோடி. குர்தாஸ்பூர் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் வினோத் கண்ணாவின் சொத்து மதிப்பு ரூபாய் 66.93 கோடி.

குடும்பமே போட்டி:

மேலும் காங்கிரசைச் சார்ந்த முன்னாள் முதல்வர் அம்ரிந்தர்சிங் அவரது மனைவி பிரணீத் கவுர், மான் பிரித்சிங் பாதல், சுனில் ஜக்கார், பிரதாப் சிங் பாஜ்வா மற்றும் சிம்ரஞ்சித் சிங் மான் ஆகியோர் பட்டியலில் உள்ள மற்றவர்கள் ஆவார்கள். பஞ்சாபில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் 9 சதவீதம் பேர் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகள் கம்மி:

மொத்த 253 வேட்பாளர்களில் 50 சதவீதத்துக்கும் மேலானவர்களின் கல்வித் தகுதி மெட்ரிக் தேர்வு பெற்றவர்கள். 32 சதவீதம் பேர் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள்.

படிக்காத மேதைகள்!!! :

அவர்களில் 68 வேட்பாளர்கள் மெட்ரிக்கிற்கும் குறைவான கல்வி தகுதி உடையவர்கள். 62 பேர் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். 21 வேட்பாளர்கள் பட்டதாரிகள். 29 வேட்பாளர்கள் முதுநிலை பட்டதாரிகள்.
9 சுயேச்சை வேட்பாளர்கள் படிக்காதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Punjab candidates are multi milliners more than 56 members. Even, all the parties involved milliners in this lokshabha election as candidates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X