பண மதிப்பிழப்பு.. ராகுல் காந்தி வெளியிட்ட நெஞ்சை உருக்கும் போட்டோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பண மதிப்பிழப்பு..ராகுல் காந்தி வெளியிட்ட நெஞ்சை உருக்கும் போட்டோ!- வீடியோ

  சென்னை: பண மதிப்பு நீக்கம் அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் வெளியிட்ட ஒரு போட்டோ வைரலாகியுள்ளது.

  சமீபகாலமாகவே டிவிட்டரில் திறம்பட கருத்துக்களை எடுத்து வைக்கும் ராகுல் காந்தி, பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியாகி சரியாக ஓராண்டாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அதை கருப்பு தினமாக அனுசரித்து வரும் நிலையில், அந்த ஒரு போட்டோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

  பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பணக்காரர்கள் அழப்போகிறார்கள் என்று அரசு கூறிய நிலையில், குர்கான் பகுதியில் ஏடிஎம் கியூவில் வரிசையை தவறவிட்ட ஒரு வயதான முதியவர், தனது இடத்தை தருமாறு அழுத காட்சியை ஆங்கில பத்திரிகையொன்று படமாக வெளியிட்டது. அந்த படம் அப்போது மிகப்பெரிய அளவில் வைரலானது.

  அந்த படத்தை எடுத்துப்போட்டுள்ள ராகுல் காந்தி, "அழுகை மிகவும் வலி தரக்கூடியது. அவரது கண்களின் ஓரத்தில் கடலோரம் தெரிவதை பார்க்கவில்லையா" என்று பொருள்பட ஹிந்தியில் டிவிட் செய்துள்ளார்.

  இந்த டிவிட் தற்போது வைரலாகியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  "A tear is too pitfall for the regime did you not see the seaside of the Eyes" says Rahul Gandhi.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற