சென்னையில் பல பகுதிகளில் மழை.. போக்குவரத்து பாதிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பல பகுதிகளில் பனியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

இந்திய பெருங்கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு நிலையாக வலு இழந்தது. ஆனாலும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருந்தது.

Rain in many parts of Chennai

இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து சென்னையில்பல இடங்களில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. கிண்டி, அடையாறு, திருவான்மியூர், சைதாப்பேட்டை பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

காலையில் இருந்து பெய்யும் மழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. பணிக்கு செல்லும் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பணியுடன்கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Moderate rain in many parts of Tamil Nadu. Rain starts pouring from morning in Guindy, Adyar, Thiruvanmiyur, Saidapet.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X