சென்னையில் துணை முதல்வர் ஓபிஎஸ் வீட்டிற்குள்ளும் புகுந்து பதம் பார்த்த மழை நீர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்தம்பித்தது சென்னை.. பல மணி நேரமாக புரட்டி அடித்த பேய் மழை.. வீடியோ

சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று மாலை தொடங்கிய மழை விடிய விடிய கொட்டியது.

இதனால் சென்னை முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. பக்கிங்ஹாம் கால்வாய் நிரம்பியதால் மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

கருணாநிதி வீட்டில் புகுந்த மழைநீர்

கனமழையால் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிற்குள் நேற்றிரவு தண்ணீர் புகுந்தது. அதனை இரவே அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

ஓபிஎஸ் வீட்டிற்குள் புகுந்த நீர்

ஓபிஎஸ் வீட்டிற்குள் புகுந்த நீர்

இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் தண்ணீர் புகுந்துள்ளது.

முதல்வர் வீட்டு சாலையிலும் வெள்ளம்

முதல்வர் வீட்டு சாலையிலும் வெள்ளம்

வீட்டின் தரை தளத்தில் தேங்கியுள்ள நீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு செல்லும் கிரீன்வேஸ் சாலையிலும் பெருமளவில் தண்ணீர் தேங்கியுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய ஓபிஎஸ் வீடு

வெள்ளத்தில் சிக்கிய ஓபிஎஸ் வீடு

பலமுறை பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது வீட்டிற்குள்ளேயே மழைநீர் புகுந்து வெள்ளத்தில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Deputy Chief minister O. Paneerselvam house has been flooded. Rain water entered in OPS house. CM Edapadi palanisami house road also drained in flood.
Please Wait while comments are loading...