பகலில் ஓய்வு.. இரவில் மீண்டும் சென்னையில் பலத்த மழை.. வெள்ளக்காடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பகல் முழுவதும் ஓய்வு எடுத்து வந்த மழை தற்போது மீண்டும் வெளுத்து கட்டி வருகிறது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பெரிய அளவில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் கடந்த நான்கு நாட்களாக கனமழை தொடருகிறது. நேற்று பிற்பகல் தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்தது. இன்று காலையில் இருந்து கொஞ்சம் பெய்யாமல் இருந்த மழை தற்போது மீண்டும் ஆரம்பித்து இருக்கிறது

நேற்று இரவு போல் இன்றும் சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இரவு முழுக்க இந்த மழை தொடரும் என்ற அச்சத்தில் மக்கள் தவித்து வருகின்றனர்.

ஓய்வு எடுத்த மழை

ஓய்வு எடுத்த மழை

நேற்று பெய்த மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இன்று காலை முதல் மழை எட்டிப்பார்க்கவில்லை. காலையில் இருந்து சில இடங்களில் வெயிலும் அடித்தது.

புறநகர்களில் வெள்ளம்

புறநகர்களில் வெள்ளம்

இதனால் சில பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள உதவியாக இருந்தது. எனினும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. பெரும்பாலான இடங்களில் தேநீர் தேங்கி மக்களுக்கு சிரமத்தை உருவாக்கியது. இந்த பகுதிகளை இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்வை இட்டார்.

கனமழை கொட்டுகிறது

கனமழை கொட்டுகிறது

தற்போது தியாகராயர் நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மயிலாப்பூர்,குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி வருகிறது.கன மழை காரணமாக ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விடிய விடிய மழையா?

இக்கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்றைப் போலவே இன்றும் விடிய விடிய கனமழை கொட்டுமோ என்கிற அச்சம் சென்னைவாசிகளிடத்தில் ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As torrential rains continued to lash Chennai on Friday Evening.
Please Wait while comments are loading...