சு.சுவாமியை விட ரஜினிக்கு இரு மடங்கு அறிவு உள்ளது... ராஜ்பகதூர் நெத்தியடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை விட ரஜினிகாந்துக்கு இரு மடங்கு அறிவு உள்ளது என்று ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் விமர்சித்துள்ளார்.

ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியின்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக மறைமுகமாக கூறியநாள் முதல் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ரஜினிக்கு எதிராக பல்வேறு கருத்துகளை பதிவு செய்துவருகிறார்.

Rajbaghdur condemns Subramanian swamy on his comment on Rajini

ரஜினிக்கு படிப்பறிவு இல்லை என்றும், ஆங்கில அறிவு்ம இல்லை என்றும் பொதுவாழ்க்கைக்கு அவர் வர தகுதியில்லாதவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது ரஜினி ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ரஜினியை சுப்பிரமணியன் சுவாமி ஒருமையிலும் பேசினார். இதனால் கொந்தளிப்பு அதிகரித்தது. இந்நிலையில் மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் கலந்து கொண்டார்.

அவர் செய்தியாளர்களிடையே தெரிவிக்கையில், சுப்பிரமணியன் சுவாமியை காட்டிலும் ரஜினிக்கு 2 மடங்கு அறிவாற்றல் உள்ளது. தான் அரசியலில் ஈடுபட போவது குறித்து பேசவேண்டாம் என்று ரஜினி என்னிடம் கூறியுள்ளார். ரஜினியை பற்றி சுப்பிரமணியன் சுசுவாமிக்கு என்ன தெரியும். இதுபோல் வாய்க்கு வந்தபடி பேசுவது சரியா என்றார் ராஜ்பகதூர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth has 2 times more knowledge than Subramanian Swamy, says Rajbaghdur.
Please Wait while comments are loading...