ரசிகர்களுக்கு கறி விருந்து... சொன்னதை செய்யாத ரஜினி... செய்யும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரசிகர்களுக்கு கிடா வெட்டி விருந்து வைக்க ஆசைப்படும் ரஜினி- வீடியோ

சென்னை: ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று இரண்டு முறை கூறிய ரஜினி அதனை நிறைவேற்றவில்லை. ஆனால் மதுரையில் உள்ள ரசிகர்கள் அழகர்கோவிலில் கெடா வெட்டி கறி சோறு போடப்போகிறார்கள்.

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவின் திருமணத்தின்போது ரசிகர்களை அழைத்து அவர்களுக்கு திருமண விருந்து கொடுக்க விரும்புவதாகவும், முடியுமானால் அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்றும் 2010ஆம் ஆண்டு அறிவித்திருந்தார் ரஜினிகாந்த். இன்னும் அந்த விருந்து நிகழ்ச்சி நடக்கவில்லை.

கடந்த வாரம் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்த ரஜினி, உங்களுக்கு எல்லாம் கடா வெட்டி கறி சோறு போட ஆசையாக உள்ளது. ஆனால் ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதால் இங்கு அது முடியாது வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன் என்று கூறினார் ரஜினி.

ரசிகர்களிடம் பேசிய ரஜினி

ரசிகர்களிடம் பேசிய ரஜினி

சென்னை ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 2ம் கட்டமாக தன்னுடைய ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், 2019ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பின்னர் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். கடந்த மாதம் 28ஆம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, ரசிகர்களுக்கு கெடா வெட்டி விருந்து கொடுக்க நினைக்கிறேன். ஆனால், ராகவேந்திரா திருமண மண்டபம் சைவம் என்பதால், வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன் என்று கூறியிருந்தார்.

ஏமாற்றிய ரஜினி

ஏமாற்றிய ரஜினி

ரஜினியின் கெடா கறி விருந்து பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்தனர். சோற்றுக்கு வீங்கியவர்களா தமிழகர்கள் என்று பலரும் கேட்டனர். எனினும் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து தராமல் ஏமாற்றி விட்டதாகவே கிண்டலடித்தனர்.

அழகர் கோவிலில் விருந்து

அழகர் கோவிலில் விருந்து

ரஜினி செய்யாததை அவரது ரசிகர்கள் நிறைவேற்றும் விதமாக மதுரையில் கெடா விருந்து கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை மதுரை ரஜினி மன்றம் செயலாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கறி விருந்து

கறி விருந்து

மதுரையில் 1400 ரசிகர் மன்றங்களை சேர்ந்த நிர்வாகிகளும் ஒரே இடத்தில் சந்திக்க இருக்கின்றனர். வரும் 7ம் தேதி மதுரை அழகர்கோவிலில் நிகழும் இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் போது ரஜினி ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த 1000 உறுப்பினர்களுக்கு கெடா வெட்டி விருந்து கொடுக்க இருக்கின்றனர்.

விருந்து தரும் ரசிகர்கள்

விருந்து தரும் ரசிகர்கள்

சொல்றதைத்தான் செய்வேன், செய்வதைத்தான் சொல்வேன் என்பது நடிகர் ரஜினியின் தாரக மந்திரம். ஆனால் விருந்து கொடுப்பேன் என்று கூறியதை நிறைவேற்றவேயில்லை. இந்த நிலையில் ரஜினி சொன்னதை அவரது ரசிகர்கள் மதுரையில் நிறைவேற்ற உள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajini fans in Madurai are getting ready to host a feast in the temple town for the fans on behalf of the actor.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற