திமுகவில் இருக்கும் ரஜினி ரசிகர்களின் மனநிலை என்ன? சர்வே எடுக்கும் அறிவாலயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  திமுகவில் இருக்கும் ரஜினி ரசிகர்களை ஆழம் பார்க்கும் அண்ணா அறிவாலயம்- வீடியோ

  சென்னை: திமுகவில் இருக்கும் ரஜினி ரசிகர்களின் மனநிலை என்ன என்பது குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாம் அண்ணா அறிவாலயம்.

  ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டதாக அறிவித்துவிட்டார். கட்சி பெயர், கொடியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

  தமிழகத்தில் எடுபடாது

  தமிழகத்தில் எடுபடாது

  ரஜினி அறிவித்த ஆன்மீக அரசியல் என்பது பாஜகவின் அஜெண்டா என்கிற கருத்தையே அரசியல் கட்சிகள் முன்வைத்து வருகின்றன. திராவிட அரசியல் நிலைகொண்டிருக்கும் தமிழகத்தில் இந்துத்துவா அரசியல் எடுபடாது என்பதும் விமர்சகர்களின் கருத்து.

  கொள்கையே இல்லையே?

  கொள்கையே இல்லையே?

  ரஜினிகாந்த் மாற்று அரசியலை முன்வைக்கிறார் என ஊடகங்கள் முதன்மைப்படுத்துகின்றன. ஆனால் கொள்கை என்ன என்று கேட்டதாலேயே தலை கிறுகிறுக்கும் ரஜினி எப்படி மாற்று அரசியலை முன்வைப்பதாக இருக்க முடியும் என்பதும் அரசியல் ஆய்வாளர்களின் கேள்வி.

  ரஜினி ரசிகர்கள் குறித்து ஆய்வு

  ரஜினி ரசிகர்கள் குறித்து ஆய்வு

  இந்த நிலையில் ரஜினியின் ரசிகர்களாக தமது கட்சியினர் மனநிலை என்ன என்பதை அறிவதில் திமுக தலைமை தீவிரமாக உள்ளதாம். இது தொடர்பாக ஒரு ரகசிய சர்வே எடுக்கவும் திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாம்.

  திராவிட அரசியல் பேச்சு

  திராவிட அரசியல் பேச்சு

  ரஜினியின் ஆன்மீக அரசியலானது திமுகவில் இருக்கும் ரசிகர்களை ஈர்க்காது என நம்புகிறது திமுக தலைமை. இதனால்தான் முன்னெப்போதையும் விட திராவிட அரசியலை தீவிரமாக பேச வேண்டிய நிலைக்கு திமுகவும் தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The DMK High Command is believing that Rajinikanth's political entry will not impact the party, sources said.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X