ஜூலையில் கட்சியை அறிவிப்பார் ரஜினி.. பெங்களூரிலிருந்து அண்ணன் சத்யநாராயணா தகவல்
பெங்களூரு: நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய கட்சியை வரும் ஜூலை மாதம் அறிவிப்பார் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் தகவல் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. இதனை அவர் ரசிகர்கள் மத்தியில் சூசகமாக அறிவித்தாலும், அவரது நண்பர்கள் ஊடகங்களில் உறுதி செய்தனர்.

இந்த நிலையில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் கெய்க்வாட் பெங்களூரில் ஒரு நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ரஜினி புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அரசியல் பிரவேசம், புதுக்கட்சி தொடங்குவது குறித்து தனது நண்பர்கள், நெருக்கமான வட்டத்தில் உள்ளவர்களிடம் ரஜினிகாந்த் முதல் சுற்று ஆலோசனை செய்து முடித்துள்ளார். எவ்வளவு ரசிகர்களைச் சந்திக்க முடியுமோ அவ்வளவு பேரையும் சந்தித்து விட வேண்டும் என்பதே ரஜினியின் விருப்பம். ஜூலைக்குள் அனைத்து மாவட்ட ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளையும் சந்தித்ததும், புதிய கட்சியை அறிவிப்பார். தமிழ் நாட்டுக்கு புதிய அரசியல் சகாப்தம் மலரும்.
ஊழலை ஒழிப்பதுதான் ரஜினியின் முதல் நோக்கமாக இருக்கும். மக்களுக்கான திட்டங்கள் அவர்களுக்குப் போய்ச் சேருவதே இல்லையே என்ற வேதனை எப்போதும் ரஜினிக்கு உண்டு. இதையெல்லாம் சரி செய்யத்தான் அவர் அரசியலுக்கு வருகிறார்," என்று தெரிவித்துள்ளார்.
ரஜினி இப்போதுள்ள எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டார் என்றும், கட்சி கட்டமைப்பு, கொடி, சின்னம் போன்றவற்றை முடிவு செய்யும் வேலை நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு?












Click it and Unblock the Notifications