இதுதான் ரஜினி ஸ்டைல்.. இதே வேகத்தில் அரசியலில் இறங்குங்க தலைவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜினியின் ஸ்டைல் வாக்கிங்-வீடியோ

  சென்னை: 67 வயதிலும் மின்னல் வேக நடைக்கு சொந்தக்காரரான ரஜினிகாந்த் இந்த வேகத்தை அரசியலிலும் காட்டி உடனடியாக இறங்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

  ரஜினிகாந்த் கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்து தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக பேசும் அளவுக்கு அவரது கருத்துகள் இருந்தன. ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர் ஜெயிப்பார் என்ற அச்சத்தின் காரணமாக பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் அவரது பச்சை தமிழரா என்ற விவாதத்தை மேற்கொண்டன.

  பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற சொலவடைக்கு ஏற்ப அவர் பொறுத்திருந்து ரசிகர்கள் மட்டுமல்லாது மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றுள்ளார்.

   கோடம்பாக்கத்தில் சந்திப்பு

  கோடம்பாக்கத்தில் சந்திப்பு

  இந்நிலையில் 6 மாத கால மௌனத்துக்கு பிறகு, ரசிகர்களை நேற்று முதல் அவரது திருமண மண்டபத்தில் சந்தித்து வருகிறார். முதல் நாளான நேற்று அவர் பேசுகையில் அரசியலுக்கு நான் புதிதல்ல. 1996-இலிருந்து அரசியலில் உள்ளேன். அதன் கஷ்ட, நஷ்டங்கள் எனக்கு தெரியும்.

   4 நாட்கள் பொறுங்க...

  4 நாட்கள் பொறுங்க...

  வரும் 31-ஆம் தேதி எனது அரசியல் நிலைப்பாட்டை நான் அறிவிப்பேன் என்றார். இன்று 2-ஆவது நாளாக ரசிகர்களை சந்திப்பதற்காக போயஸ் தோட்டத்திலிருந்து காரில் புறப்பட்டார். அப்போது ரஜினியிடம் அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இன்னும் 4 நாட்கள் தானே உள்ளது பொறுத்திருங்கள் நான் அறிவிக்கிறேன் என்றார்.

   இன்று கருப்பு உடையில்...

  இன்று கருப்பு உடையில்...

  முதல் நாளான நேற்று வெள்ளை உடையில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த், இன்று கருப்பு உடையில் வந்திருந்தார். அப்போது உள்ளே நடந்து வரும் போது மின்னல் வேகத்தில் இளைஞர்கள் கூட ஈடு கொடுக்க முடியாத வேகத்தை பார்த்தபோது ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் திகைத்தனர்.

   கம்பீர நடை

  கம்பீர நடை

  கோடம்பாக்கம் திருமண மண்டபத்துக்கு ரசிகர்களை சந்திக்க உள்ளே வந்த ரஜினி, லிப்டில் இருந்து இறங்கி வருவது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அவரை கடவுளாக பார்க்கும் அவரது ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பூரிப்படைந்துள்ளனர். தலைவரின் ஒவ்வொரு அசைவும் ஒரு ஸ்டைல்தான் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

   அரசியலுக்கு வரவேண்டும்

  அரசியலுக்கு வரவேண்டும்

  இந்த வீடியோவில் ரஜினி மின்னல் வேகத்தில் வருவதை போன்று அதை காட்டிலும் கூடுதல் வேகத்தில் அரசியலில் அதிரடியாக இறங்கி மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை லஞ்ச, லாவண்யமற்ற, அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக அவர் மாற்ற வேண்டும் என்பதே ரசிகர்கள் பிரார்த்தனையாக உள்ளது. சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறுவாரா.... 31-ஆம் தேதி தெரியவரும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth is going to announce his political stand on Dec 31. He has to fasten his steps to come to politics.Fans wish the same.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற