பெண்கள் பாதுகாப்பு பற்றிய நிருபர்கள் கேள்விக்கு ரஜினிகாந்த் கொடுத்தாரு பாருங்க ஒரு ரிப்ளை.. ப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பெண்கள் பாதுகாப்பு பற்றி ரஜினி அளித்த பதில்- வீடியோ

  சென்னை: இமயமலை செல்வதாக அறிவித்துவிட்டு சென்னையில் இருந்து இன்று கிளம்பினார் ரஜினிகாந்த். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்த கேள்விக்கு அப்போது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

  சென்னையில் இருந்து விமானத்தில் ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு செல்லும் அவர் அங்கிருந்து தர்மசாலா, உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

  இன்று காலை போயஸ்கார்டன் வீட்டில் இருந்து கிளம்பிய ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

  அப்போது தனது பயண திட்டம் குறித்து அவர் எடுத்துரைத்தார். ஆனால், பெண்கள் பாதுகாப்பு குறித்த ஒரு கேள்வியை அவர் தவிர்த்த விதம், சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

  கொலை பீதி

  கொலை பீதி

  சென்னையில் கல்லூரி மாணவி அஸ்வினி என்பவர் நேற்று பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் அவரின் முன்னாள் காதலன் அழகேசன் என்பவரால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதேபோல காரைக்கால் வினோதினி, சென்னை வித்யா, சோனியா வேளச்சேரி இந்துஜா உள்ளிட்ட மேலும் பல பெண்களும் சமீபத்தில் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டனர்.

  பெண்கள் பாதுகாப்பு

  பெண்கள் பாதுகாப்பு

  இதுபோன்ற சம்பவங்களால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தவண்ணம் உள்ளன. இதுதொடர்பாக ரஜினிகாந்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து தமிழகத்தில் 2 பெண்கள் இறந்துள்ளார்கள், பெண்களுக்கான பாதுகாப்பு எப்படி உள்ளது? என்று கேள்வியை முன்வைத்தனர்.

  அதிர்ச்சி ரிப்ளே

  அதிர்ச்சி ரிப்ளே

  ஆனால், கேள்வியை முடிக்கும் முன்பே கையெடுத்து கும்பிட்டு வணக்கம் என கூறி திரும்பி சென்றுவிட்டார் ரஜினிகாந்த். விடாத நிருபர்களோ, சார், சார் என கத்தினர். ஆனால், அவர் திரும்பி பார்க்காமல் கிளம்பிவிட்டார். மேலும், முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தற்போது அது குறித்து பதிலளிக்க விரும்பவில்லை என்றும் ரஜினி தெரிவித்துவிட்டார்.

  கேலி மீம்ஸ்

  அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக கூறிய ரஜினிகாந்த், இப்படி முக்கிய பிரச்சினைகளில் வாய் திறக்காமல் கடந்து சென்றது சோஷியல் மீடியாவில் சூடான விவாதங்களுக்கு காரணமாகியுள்ளது. மீம்ஸ்களுக்கும் காரணமாகியுள்ளது. தற்போதைக்கு அரசியல் பற்றி பேசமாட்டேன் என ரஜினிகாந்த் ஏற்கனவே கூறியிருந்தாலும், இதுபோன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கும் அவர் மவுனம் காப்பது ஏன் என்பது புரியவில்லை.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth who announce to kick start a political party, refused to answer the questions on women safety in Tamilnadu, where women murder become a common phenomena in nowadays.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற