முதல்வராக வந்தால்தான் வாய் திறப்பேன் என்று சொல்லும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம்.. சீமான் அட்டாக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை; அமைதியாகவே இருந்துவிட்டு முதல்வராக வந்தால்தான் வாய் திறப்பேன் என்று சொல்லும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Rajinikanth should not come to politics, says Seeman

அதில், "ரஜினி போன்றவர்கள் தமிழகத்தில் வந்து பிழைக்கலாம். கட்சியை ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கக் கூடாது. ரஜினி இங்கு வந்து வேலை செய்ய ஒன்றும் இல்லை. அதனை நாங்களே செய்து கொள்கிறோம். என் தாய் நிலத்தை எங்கள் அளவிற்கு யாராலும் நேசிக்க முடியாது.

நாங்கள் நீண்ட காலமாக காயம் பட்டுக் கிடக்கிறோம். என் மொழி சிதைந்து கிடக்கிறது. என் பண்பாடு செத்துப் போய்விட்டது. என் வேளாண்மை செத்துவிட்டது. என் வளங்கள் களவு போய்விட்டன. இதில் இருந்து எப்படியாவது நாங்கள் மீண்டெழத் துடிக்கும் போது, மறுபடியும் மறுபடியும் இன்னொருவரிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு கைக்கட்டி நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

முதல்வராக வந்தால் தான் வாய் திறந்து பேசுவேன் என்றால் அதனை எப்படி ஏற்க முடியும். நடிகராக இருப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆளும் தகுதி என்றால் அதனை நான் ஏற்க மாட்டேன்" என்று சீமான் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Rajinikanth should not come to politics, says Naam Thamizhar leader Seeman.
Please Wait while comments are loading...