For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"என் ஓட்டு உனக்கில்லை.." சசிகலாவுக்கு எதிராக வீதிக்கு இறங்கிய பாடகி.. வைரலான வீடியோ

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து அதிருப்தியடைந்த சோபியா குழுவினர், போயஸ் இல்லம் நோக்கி பாடியபடியே பயணித்தனர். அவரது பேஸ்புக் பக்கத்தில் இது லைவாக

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: "என் ஓட்டு உனக்கில்லை.." என்ற பாடலுடன் போயஸ் கார்டன் நோக்கி பாடகி சோபியா அஷ்ரப் மற்றும் அவரது இசைக் குழுவினர் நடை பயணம் மேற்கொண்ட சம்பவம் சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து அதிருப்தியடைந்த சோபியா குழுவினர், போயஸ் இல்லம் நோக்கி பாடியபடியே பயணித்தனர். அவரது பேஸ்புக் பக்கத்தில் இது லைவாக காண்பிக்கப்பட்டது.

Rapper-activist Sofia Ashraf song on Sasikala going viral

கித்தார் வாத்தியத்துடன், தனது குழுவிலுள்ள நால்வருடன் பாடல் பாடியபடியே சோபியாவும் போனார். "காசு அடிக்கிற, லஞ்சம் புடுங்குற, பாவி, கட்சி மாறுது, ஊரு இன்னும் நாறுது, ஏமாளி, தேர்தல் முடிந்தது, விரக்தி கூடுது, கோமாளி" என்று போகும் அன்த பாடலின் மையப்பொருளாக இருந்தது, "என் ஓட்டு உனக்கில்லை" என்பதுதான்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கே மக்கள் ஓட்டுபோட்டதாகவும், சசிகலா திடீரென முதல்வர் பதவிக்கு வருவதையும் இந்த பாடல் சுட்டிக்காட்டியது. போயஸ் இல்லம் அருகே பாடகர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சியும் வீடியோவிலுள்ளது. சங்கு ஊதி, பாடல் பயணத்தை நிறைவு செய்தது அக்குழு. இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.

English summary
Rapper-activist Sofia Ashraf and her crew stepped out and went to Poes Garden late on Sunday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X