வரிசையாக மூடப்படும் மெக் டொனால்ட்ஸ் கடைகள்.. மிரள வைக்கும் பின்னணி என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வட இந்தியாவில் இருக்கும் 'மெக் டொனால்ட்ஸ்' உணவகங்கள் பல வரிசையாக மூடப்பட்டு வருகிறது. இந்த ஜனவரி மாதத்திலும் இன்னும் நிறைய கடைகள் மூடப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

வட இந்தியாவில் 'மெக் டொனால்ட்ஸ்' நிறுவனத்திடம் ஒப்பந்த செய்து இருக்கும் விக்ரம் பாக்க்ஷி என்ற நபருக்கும் ராதா கிருஷ்ணன் புட் லேண்ட் என்ற நிறுவனத்திற்கும் இடையில் நடக்கும் பிரச்சனை காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ஆனால் 'மெக் டொனால்ட்ஸ்' நிறுவனமே இதன் காரணமாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி சில குறிப்பிட்ட 'மெக் டொனால்ட்ஸ்' கடைகளை குறிப்பிட்டு இனி அந்த கடைகளில் சாப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளது.

பெரிய நிறுவனம்

பெரிய நிறுவனம்

உலகின் பல இடங்களில் இருக்கும் பிரபல உணவகம் 'மெக் டொனால்ட்ஸ்'. சென்னையில் இருக்கும் மால்களில் தொடங்கி வடகிழக்கு இந்தியாவில் இருக்கும் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் இவர்கள் தங்கள் கிளைகளை வைத்து இருக்கிறார்கள். மேலும் இந்தியாவின் முன்னணி உணவகத்தில் ஒன்றாக 'மெக் டொனால்ட்ஸ்' திகழ்கிறது

என்ன முறை

என்ன முறை

எல்லா இடங்களிலும் கடைகள் இருந்தாலும் எல்லா கடைகளையும் 'மெக் டொனால்ட்ஸ்' நிறுவனம் நேரடியாக இயக்காது. இதற்காக இந்தியா முழுக்க ஒவ்வொரு பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் டீலர்கள் இருக்கிறார்கள். அந்த டீலர்கள் மூலம் கடையை விருப்பம் உள்ள நபர்களுக்கு கொடுத்து நடத்த வைப்பார்கள். உணவுப் பொருட்கள் மட்டும் 'மெக் டொனால்ட்ஸ்' நிறுவனத்திடம் வாங்கப்படும்.

மூடப்பட்டது

மூடப்பட்டது

இந்த நிலையில் டெல்லியில் கடந்த வாரம் ஒரே நாளில் 84 'மெக் டொனால்ட்ஸ்' உணவகங்கள் மூடப்பட்டது. இந்த விஷயம் உலகம் முழுக்க பேசப்பட்டது. மேலும் வடகிழக்கு இந்தியாவில் இருக்கும் சில 'மெக் டொனால்ட்ஸ்' உணவகங்களில் சாப்பிட வேண்டாம் என 'மெக் டொனால்ட்ஸ்' நிறுவனமே பேட்டி அளித்து இருந்தது. இந்த மாதம் இன்னும் நிறைய 'மெக் டொனால்ட்ஸ்' உணவகங்கள் மூடப்பட உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது.

பிரச்சனை என்ன

பிரச்சனை என்ன

'மெக் டொனால்ட்ஸ்' நிறுவனத்தின் டீலர்களில் முக்கியமானவராக இருக்கிறார் விக்ரம் பாக்க்ஷி. இவருக்கும் ராதா கிருஷ்ணன் புட் லேண்ட் என்ற நிறுவனத்திற்கும் இடையில் சில காலத்திற்கு முன் பிரச்சனை உருவாகி இருக்கிறது. இவர்கள் அளிக்கும் உணவு தரமாக இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மெக் டொனால்ட்ஸ்க்கும் விக்ரமிற்கும் கூட இதனால் பிரச்சனை வந்துள்ளது. இதுவே கடைகள் மூடப்படுவதற்கு காரணம் என்று கூறப்பட்டு உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Most of the Mc Donalds outlets shuts down in India after the problem raised between local dealer and Mc Donalds contractors.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற