றெக்க கட்டி பறக்கும் மனசு - ஜீ டிவியில் கிராமத்து காதல் கதை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய புத்தம் புதிய பல நிகழ்ச்சிகள் ஜூன் மாதம் ஒளிபரப்பாக உள்ளன. 'றெக்க கட்டி பறக்கும் மனசு' என்ற புதிய நெடுந்தொடர் ஜூன் 19 முதல் திங்கள் - வெள்ளி வரை, இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

ரசிகர்களை ஈர்க்கும் பரபரப்பான அதிரடி திருப்பங்களுடன் உணர்வுப்பூர்வமான நெடுந்தொடராக இந்த தொடர் உருவாகியுள்ளது.

இது கிராமத்து இளைஞனுக்கும், படித்த ஆசிரியைக்குமான காதல் கதை. கிராமத்தை மையக்கருவாக கொண்டு இந்த நெடுந்தொடர் உருவாகி உள்ளது.

ஆஞ்சநேய பக்தர்

ஆஞ்சநேய பக்தர்

அமைச்சரும், சக்திவாய்ந்த அரசியல் தலைவருமான ஜெயராஜ் என்பவரின் மூத்த மகனான தமிழ் என்பவரின் கதாபாத்திரத்தில் இந்த நெடுந்ததொடர் நகர்கிறது. பலாசாலியான தமிழ் ஆஞ்சநேயர் பக்தர்.

தமிழ் - அஞ்சலி

தமிழ் - அஞ்சலி

கல்வியறிவற்ற, உடற்பயிற்சியில் ஆர்வமுடைய, விவசாயத் தொழில் செய்யும் இளைஞரான தமிழ், கிராமத்திற்கு ஆசிரியையாக வரும் அழகிய நகரத்துப் பெண்ணான அஞ்சலி மீது திடீர் என காதல் ஏற்படுகிறது.

தம்பியின் மனைவி

தம்பியின் மனைவி

தமிழின் இளைய சகோததரான சக்தி, அரசியல் பின்னணி குடும்பத்தை சேர்ந்த நந்திதா என்பவரை திருமணம் செய்கிறார். நந்திதா ஒட்டுமொத்த குடும்பத்தையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரத் துடிக்கிறார். தமிழுக்கு திருமணமானால் தமது செல்வாக்கு குறையும் என அவரது திருமணத்திற்கு முட்டுக்கட்டை இடுகிறார்.

காதல் கதை

காதல் கதை

றெக்க கட்டி பறக்கும் மனசு நெடுந்தொடர், தமிழ் அஞ்சலியின் காதலை சுவைபட விவரிப்பதோடு, நந்திததாவின் தந்திரங்களை இருவரும் எவ்வாறு முறியடிக்கின்றனர் என்பதையும் விறுவிறுப்பான கதையாக கொண்டுள்ளது.

பகல் நிலவு சமீரா

பகல் நிலவு சமீரா

ஜீ தமிழின் பிரபல நிகழ்ச்சிகளான டான்ஸ் ஜோடி டான்ஸ், டான்ஸிங் கில்லாடிஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று கலக்கிய சித்தார்த் தமிழாக நடிக்க உள்ளார். பகல் நிலவு நெடுந்தொடரில் நடிக்கும் சமீரா அஞ்சலியாக நடிக்க உள்ளார். ஜூன் 19 முதல் திங்கள் - வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள றெக்க கட்டி பறக்கும் மனசு சீரியலை பார்த்து ரசியுங்கள் நேயர்களே என்று கூறியுள்ளார் சீரியலின் தயாரிப்பாளர் அன்வர்.

ரீமேக் சீரியல்

இந்தி திரைப்படங்களைத்தான் ரீமேக் செய்தார்கள். இப்போது இந்தி சீரியலை ரீமேக் செய்துள்ளனர். இந்த தொடரில் நடிக்கும் கதாநாயகி சமீரா, தனது காதலருடன் இணைந்து இந்த சீரியலை தயாரிக்கிறாராம். இருவரும் இணைந்து பகல் நிலவு சீரியலில் நடித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
This June, Zee Tamil is going all out to introduce new programs that stand apart with high entertainment value. Rekka Katti Parakum Manasu is a brand, new soap that is to be launched on June 19th.
Please Wait while comments are loading...