For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடைகிறது அதிமுக- கூட்டணி... பாமகவுக்கு மொத்தமே 6 தொகுதிகளில்தான் செல்வாக்கு.. பதிலடிகளால் பரபரப்பு

Sources said that Rift in AIADMK- PMK alliance in Tamilnadu.

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒன்றரை மாதங்களிலேயே அதிமுக- பாமக கூட்டணியில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாமகவுக்கு மொத்தமே 6 தொகுதிகளில்தான் செல்வாக்கு என அதிமுக பதிலடி கொடுத்துள்ளதால் அந்த கூட்டணியில் பரபரப்பு நிலவுகிறது.

Recommended Video

    என்ன நடந்தது? எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட OPS | Oneindia Tamil

    சட்டசபை தேர்தல் பேச்சுகள் தொடங்கிய போதே பாமக, கூட்டணி பேரத்தை வன்னியர் இடஒதுக்கீடு மூலம் தொடங்கியது. இதற்கான போராட்டங்களை நடத்தியது.

    உடைகிறது அதிமுக- கூட்டணி... பாமகவுக்கு மொத்தமே 6 தொகுதிகளில்தான் செல்வாக்கு.. பதிலடிகளால் பரபரப்புஉடைகிறது அதிமுக- கூட்டணி... பாமகவுக்கு மொத்தமே 6 தொகுதிகளில்தான் செல்வாக்கு.. பதிலடிகளால் பரபரப்பு

    பாமகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை

    பாமகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை

    இதனால் அதிமுக, பாமகவை தேடிப் போய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் வன்னியர் தனி இடஒதுக்கீடு சாத்தியம் இல்லை என்கிற நிலையை அதிமுக தரப்பு தெரிவித்தது.

    வன்னியர் இடஒதுக்கீடு

    வன்னியர் இடஒதுக்கீடு

    இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு 17.5% உள் ஒதுக்கீடு வழங்குவது என அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்தது. இந்த இடஒதுக்கீடு அறிவிப்பால் பாமகவுக்கு 23 தொகுதிகளை மட்டும் அதிமுக கொடுத்தது. அப்போது பாமக, இது மிகவும் குறைவான தொகுதிகள்தான் என்றது.

    பாமக செல்வாக்கு குறித்து விமர்சனம்

    பாமக செல்வாக்கு குறித்து விமர்சனம்

    ஆனால் கடந்த சில தேர்தல்களில் பாமகவின் செல்வாக்கை முன்வைத்தும் சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் அடிப்படையிலும் பாமவுக்கு முந்தைய செல்வக்கு இல்லை என கூறப்பட்டது; இதனால் அதிமுக அணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளே அதிகம்தான் என விமர்சிக்கப்பட்டது. அதுவும் தோற்றுப் போவோம் என தெரிந்தோ திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியை எல்லாம் பாமக பெற்றது டூ மச் என்கிற விமர்சனமும் வந்தது.

    பாமகவுக்கு 5 இடங்கள்தான்..

    பாமகவுக்கு 5 இடங்கள்தான்..

    சட்டசபை தேர்தலில் அதிமுக பலமான மாவட்டங்களில் அதிமுகவின் தயவில் பாமகவும் 5 இடங்களில்தான் வென்றது. இது அப்பட்டமாக பாமகவின் செல்வாக்கு என்ன என்பதை வெளிப்படுத்துவதாகவும் ஆய்வுக் கருத்துகள் வெளியிடப்பட்டிருந்தன. இருந்தாலும் அதிமுக தரப்பில் இருந்து பெரிய அளவுக்கு பாமக மீது விமர்சனங்கள் வைக்கப்படாமல் இருந்தன.

    அன்புமணி விமர்சனம்- அதிமுக பதிலடி

    அன்புமணி விமர்சனம்- அதிமுக பதிலடி

    இந்த நிலையில் பாமக இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி, பாமக இல்லை எனில் 20 இடங்களில்தான் அதிமுக வெற்றி பெற்று இருக்கும் என விமர்சித்தார். இது அதிமுகவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுகவின் பெங்களூர் புகழேந்தி அளித்த பேட்டியில், பாமகவுக்கு மொத்தமே 6 தொகுதிகளில்தான் செல்வாக்கு... ஓபிஎஸ் கையெழுத்து போட்டதால்தான் அன்புமணி ராஜ்யசபா எம்.பியானார் என்பதை மறக்கலாமா? என சாடியுள்ளார்.

    அதிமுக- பாமக கூட்டணி விரிசல்?

    அதிமுக- பாமக கூட்டணி விரிசல்?

    சட்டசபை தேர்தல் முடிவடைந்த ஒன்றரை மாதங்களிலேயே அதிமுக- பாமக இடையே முட்டல் மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. இதனால் அடுத்தடுத்து நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவைகளில் அதிமுக- பாமக கூட்டணி நீடிக்குமா? என்பது சந்தேகமே என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

    English summary
    Sources said that Rift in AIADMK- PMK alliance in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X