வீச்சரிவாளால் கிடாவை வெட்டுவது மாதிரியே கேக் வெட்டிய ரவுடி பினு தெனாவெட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் துப்பாக்கி முனையில் 69 ரவுடிகள் கைது- வீடியோ

  சென்னை: பூந்தமல்லியில் பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினு கேக்கை வீச்சரிவாளால் வெட்டியது தெரியவந்ததுள்ளது.

  சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் ரவுடி பினு. இவருக்கு நேற்று பிறந்தாள்.

  தனது பிறந்தநாளை சக ரவுடிகளுடன் தடல்புடலாக கொண்டாட முடிவு செய்திருந்தார் பினு. இதைத்தொடர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் செய்யப்பட்டிருந்தது.

  ரவுடி பிறந்தநாள்

  ரவுடி பிறந்தநாள்

  பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சக ரவுடிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு ரவுடிகள் அனைவரும் மலையம்பாக்கத்தில் திரண்டிருந்தனர்.

  வீச்சரிவாளால் கேக் வெட்டி..

  வீச்சரிவாளால் கேக் வெட்டி..

  ரவுடி பினுவுக்கு சக ரவுடிகள் பெரிய ரோஜாப்பூ மாலையை அணிவித்தனர். இதைத்தொடர்ந்து தனது பெரிய வீச்சரிவாளைக் கொண்டு ரவுடி பினு கேக்கை வெட்டி பிறந்த நாளை சினிமா பாணியில் கோலாகலமாக கொண்டாடினார்.

  சுற்றி வளைத்த போலீஸ்

  சுற்றி வளைத்த போலீஸ்

  ரவுடிகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதைத்தொடர்ந்து ரவுடிகள் திரண்டிருந்த ஏரியாவை போலீசார் சுற்றி வளைத்தனர்.

  துப்பாக்கி முனையில் கைது

  துப்பாக்கி முனையில் கைது

  பின்னர் அங்கு கூடியிருந்த 76 ரவுடிகளையும் போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

  சினிமா பாணியில் ..

  சினிமா பாணியில் ..

  கைது செய்யப்பட்ட ரவுடிகளை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சினிமா பாணியில் ரவுடிகள் பிறந்த நாள் கொண்டாடியதும் அவர்களை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A Rowdy named Binu celebrates his birthday yesterday with all the rowdies of Chennai. He had cut the cake with sickle.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற