9 கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி ராதாகிருஷ்ணனுக்கு ஸ்கெட்ச் போட்ட பலே பினு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் துப்பாக்கி முனையில் 69 ரவுடிகள் கைது- வீடியோ

  சென்னை: பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பினு மற்றும் அவரது கேங்க் கொல்ல ஸ்கெட்ச் போட்ட ரவுடி ராதாகிருஷ்ணன் 9 கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி ஆவார்.

  சென்னை பூந்தமல்லி அருகே மலையம்பாக்கத்தில் ரவுடி ஒருவரின் பிறந்த நாளை சக ரவுடிகள் சினிமா பாணியில் கோலாகலமாக கொண்டாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை சூளைமேட்டை சேர்ந்த ரவுடி பினுவின் பிறந்த நாளை சென்னை மாநகரம் முழுவதும் உள்ள ரவுடிகள் ஆட்டம் பாட்டத்துடன் கோலகலமாக கொண்டாடினர்.

  இதனையறிந்த போலீசார் போலீஸ் வாகனத்தில் செல்லாமல் தனியார் வானகத்தில் சென்று கையும் களவுமாக பிடித்தனர். அவர்களில் பினு, கனகு, விக்கி ஆகிய மூன்று பேர் தப்பியோட 76 பேரை கையும் களவுமாக துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தது போலீஸ்.

  தேடப்படும் குற்றவாளி

  தேடப்படும் குற்றவாளி

  அவர்களிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் ரவுடி ராதாகிருஷ்ணனை போட்டுத்தள்ள ப்ளான் போட்டதாக பகீர் தகவலை வெளியிட்டனர். ரவுடி ராதாகிருஷ்ணன் 9 கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாவார்.

  குருநாதர் நாகேந்திரன்

  குருநாதர் நாகேந்திரன்

  அவர் மீது 6 கொலை முயற்சி வழக்குகளும் உள்ளது. ரவுடி ராதாகிருஷ்ணனின் குருநாதர் ரவுடி வடசென்னை நாகேந்திரனாம்.

  தொழிலை பார்த்து வரும் ரா.கி

  தொழிலை பார்த்து வரும் ரா.கி

  அவர் தற்போது சிறையில் உள்ள நிலையில் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட மொத்த தொழிலையும் கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார் ரவுடி ராதாகிருஷ்ணன்.

  தொழில் போட்டி

  தொழில் போட்டி

  இவர் தீவிர அரசியலில் இருந்து விலகிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவருக்கு நெருக்காமானவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றில் ராதாகிருஷ்ணன் கேங்குக்கும் பினு கேங்குக்கும் கடுமையான போட்டி இருந்துள்ளது.

  கொலை செய்ய திட்டம்

  கொலை செய்ய திட்டம்

  இதுதொடர்பாக பலமுறை இரண்டு கேங்குங்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறையில் இருந்தபோது பினு தனது நண்பர்களுடன் ராதாகிருஷ்ணனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

  போலீசாருக்கு தகவல்

  போலீசாருக்கு தகவல்

  ராதாகிருஷ்ணனை போட்டு தள்ளினால் தனது தொழிலில் ரூட் கிளியராகும் என்று எண்ணிய பினு இதற்காகதான் சிறை நண்பர்களை அழைத்து பிறந்தநாள் பார்ட்டி கொடுத்துள்ளார். இதனையறிந்த ரவுடி ராதாகிருஷ்ணன் கேங்க் தமக்கு வேண்டிய போலீசாருக்கு தகவல் கொடுத்தது.

  பினு கேங்கை அள்ளிய போலீஸ்

  பினு கேங்கை அள்ளிய போலீஸ்

  இதன் அடிப்படையிலேயே பினு கேங்கை சிந்தாமல் சிதறாமல் அள்ளியதாம் போலீஸ். சென்னையில் 76 ரவுடிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rowdy Radhakirshnan is the most wanted person in nine murder case. He is the close friend of former ADMK minister.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற