100 நாள் வேலை திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் உள்ள 100 நாள் வேலை திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் நிதி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று நிதியமைச்சர் ஜெயக்குமார், 2017-18ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது, மாநில பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்கான சட்டத்தினை மாநில அரசே ஏற்கும் என்றும், நெடுஞ்சாலைத் துறைக்கு 10,067 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார்.

Rs. 1000 Crore for 100 day work programme

மேலும், ஊரக வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு 469 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சி திறன் மேம்பாடு இயக்கத்திற்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

தமிழ்நாடு உள்கட்டமைப்பு வசதிகளுக்கு 6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் ஜெயக்குமார், தொழில் துறைக்கு 2,088 கோடியும், குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 615 கோடி ரூபாயும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rs. 1000 Crore allocated for 100 day work programme in Tamil Nadu budget 2017-18.
Please Wait while comments are loading...