தடுப்பணைகள் கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் எடப்பாடியார் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Rs 1000 crore has been allocated to construct dams in Tamil Nadu : Chief Minister Edappadi Palanisamy

நபார்டு வங்கி உதவியுடன் தடுப்பணைகள் கட்டும் பணி தொடங்கி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த அரசை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பே மக்களுக்கு உதவிகளை செய்தவர் எம்.ஜி.ஆர் என்றும் அவர் கூறினார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தமிழகத்திற்கு கிடைத்த வரம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chief Minister Edappadi Palanisamy has said that Rs 1000 crore has been allocated to constrct dams in Tamil Nadu.He said that MGR was helping people before coming to politics.
Please Wait while comments are loading...