சென்னையில் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் மீது மர்மகும்பல் தாக்குதல் : காவல்துறையினர் விசாரணை

Subscribe to Oneindia Tamil
  சென்னையில் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் மீது மர்மகும்பல் தாக்குதல்- வீடியோ

  சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் சிலம்பாட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆர் எஸ் எஸ் அமைப்பினர் மீது மர்மகும்பல் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி மைதானத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் சிலம்பாட்டப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். நேற்று பயிற்சியில் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் ஈடுபட்டு இருந்தனர்.

  RSS People attacked by Un Known Persons at Chennai

  அப்போது அங்கு வந்த 15 பேர் அடங்கிய மர்ம கும்பல், அங்கு பயிற்சியில் ஈடுபட்டு இருந்த ஆர் எஸ் எஸ் அமைப்பினரை சரமாரியாக தாக்கினர். இதில் மூன்று பேர் காயமடைந்தனர்.

  இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  RSS People attacked by Un Known Persons. RSS people attacked at Chennai Nungambakkam Corporation Ground while they are indulging in Regular Practice.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற