தீபாவளி போனஸ்.. நாகர்கோவில் ரப்பர் கழக அலுவலகம் முன்பு விடிய, விடிய போராட்டம் நடத்திய தொழிலாளர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கியது போலவே இந்த ஆண்டும் போனஸ் வழங்க கோரி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தால் இரவு முழுக்க அங்கு பரபரப்பு நிலவியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்களின் முக்கிய தொழில்களில் ஒன்று ரப்பர் தோட்டத் தொழில் ஆகும். ஒவ்வொரு வருடமும் இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை போனஸ் வழங்கப்படவில்லை.இதையடுத்து அந்த மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.

Rubber plantation workers in Kanniyakumari are protesting to get bonus!

சென்ற ஆண்டு வழங்கியது போலவே 20% தீபாவளி போனஸ் வழங்க கேட்டு நேற்று காலை நாகர்கோவில் அரசு ரப்பர் கழக அலுவலகம் முன்பு தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். காலை தொடங்கிய இந்தப் போராட்டம் இரவு முழுக்க நடைபெற்றதால் பரபரப்பு நிலவியது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rubber plantation workers in Kanniyakumari are protesting to get 20% bonus for diwali.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற