For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலின் பேச அனுமதி மறுப்பு - சட்டசபையில் திமுக - அதிமுக அமளி துமளி #tnassembly

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் பேச அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசிய பிறகே அமைச்சர் பேச வேண்டும் என திமுகவினர் கூறியதால் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர் இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது

Ruckus in Tamil Nadu assembly

சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று 7 துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், ஆளுநர் நியமனத்தில் மாநில அரசின் ஆலோசனையை கேட்க வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார். மத்திய அரசு முதல்வருடைய கருத்தை கேட்டுத்தான் தற்போது ஆளுநரை நியமித்திருக்கும் என நம்புகிறேன் என்று பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும் போதே முதல்வர் ஜெயலலிதா சிறுவாணி தீர்மானம் கொண்டு வந்தார். திமுக ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியதுடன் ஸ்டாலின் பேச எழுந்தார். ஸ்டாலின் பேச அனுமதி அளிக்காததால் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசிய பிறகே அமைச்சர் பேச வேண்டும் என திமுகவினர் கூறியதால் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளியினால் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

English summary
Assembly witnessed ruckus during a debate today as the chair denied MKStalin to air his voice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X