சேலம் அருகே ஆட்டோ ஓட்டுநர் சராமாரியாக வெட்டிக் கொலை - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் ஆட்டோ ஓட்டுநரை மர்மக்கும்பல் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் கொண்டலாம்பட்டியில் வசித்து வருபவர் கோவிந்தராஜன். இவர் ஆட்டோ ஒட்டுநராக உள்ளார். இவர் சம்பவத்தன்று, மணியனூர் மயானம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

 In Salem auto driver was murder by ganster

அப்போது மர்மநபர்கள் அவரை மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அதனையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் அதிகமான கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Salem Kondalampatti auto driver murdered by unknown persons and police searching that unknown gang.
Please Wait while comments are loading...