டெல்டா மாவட்டத்தில் தொடரும் கனமழை... திருவாரூரில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நாசம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவாரூர் : வடகிழக்குப் பருவமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை கடந்த 4 நாட்களாக சென்னை, கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகர்ப்பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்குவதால் மக்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

 Samba crops cultivated at 500 acres affected at Thiruvarur district

மயிலாடுதுறை வட்டத்திற்குட்பட்ட கோடங்குடி, மறையூர், ஊர்குடி, அகரகீரங்குடி, நீடுர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் நெற்கயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளனர்.

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் டெல்டா மாவட்டத்தில் சம்பா பயிர்கள் பயிடப்பட்டன. மயிலாடுதுறையில் மட்டும் சுமார் 20 ஹெக்டேர் நிரபப்பரப்பில் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதே போன்று தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

திருவாரூர் மாவட்டம் மணவாளன் பேட்டையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சம்பா பயிர்களை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருவாரூர் மாவட்டதத்தில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Samba crops cultivated at 500 acres affected at Thiruvarur district, Minister Kamaraj reviewed the affected crops today morning.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற