அமைதியின் சின்னம் சசிகலா.. டிடிவி தினகரன் புன்னகை மன்னன்.. சட்டசபையில் எம்எல்ஏ புகழாரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா அமைதியின் சின்னம் என்றும் டிடிவி தினகரன் புன்னகை மன்னன் என்றும் சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ பழனியப்பன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சட்டசபையில் இன்று தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டசபையில் பேசிய எம்எல்ஏ பழனியப்பன் சசிகலா அமைதியின் சின்னம் என்றார். அதேபோல் டிடிவி தினகரன் புன்னகை மன்னன் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

Sasikala is the Icon of Peace and TTV Dinakaran is the King of Smile said ADMK MLA Palaniyappan

மற்ற எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களை குறிப்பிட்டு அதிமுகவின் பண்பாட்டை விட்டு விலகுகிறோமோ என்ற சந்தேகம் எழுவதாகவும் எம்எல்ஏ பழனியப்பன் கூறினார். மேலும் சசிகலாவின் தலைமையை அனைவரும் ஏற்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

டிடிவி தினகரனின் திகார் சிறைவாசத்துக்குப் பிறகு அதிமுகவின் சசிகலா அணி எடப்பாடி அணி தினகரன் அணி என இரண்டாக பிரிந்துள்ளது. இந்நிலையில் எம்எல்ஏ பழனியப்பன் சசிகலாவையும் தினகரனையும் மாறி மாறி புகழ்ந்திருப்பது சக எம்எல்ஏக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala is the Icon of Peace and TTV Dinakaran is the King of Smile said ADMK MLA Palaniyappan. He urged others to accept Sasikala's as chief.
Please Wait while comments are loading...