For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரவு முழுக்க காவல்துறை பிடியில் இருந்த சசிகலா புஷ்பா கணவர்.. ஆட்கொணர்வு மனுவால் அம்பலம்!

நேற்று இரவு முழுக்கவே காவல்துறை கட்டுப்பாட்டில்தான் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் திலகன் பிடித்து வைக்கப்பட்ட தகவல் அம்பலமாகியுள்ளது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் திலகன் நேற்று இரவு முழுக்க போலீஸ் பிடியில் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேற்று சசிகலா புஷ்பா எம்.பி. வருவதாக தகவல் பரவியது. இதனால் அங்கு பதற்றம் ஏற்படாமல் தவிர்க்க போலீஸ் குவிக்கப்பட்டது. ஆனால் சசிகலா புஷ்பாவுக்கு பதில், அவரின், கணவர் லிங்கேஸ்வரன் திலகன் வந்தார்.

லிங்கேஸ்வர திலகன் ஒரு ஆவணத்தை கொடுக்க வந்திருப்பதை அறிந்த அதிமுகவினர் சிலர் அவரை கடுமையாக தாக்கினர். இதில் லிங்கேஸ்வரன் மூக்கு உடைபட்டது. ரத்த வெள்ளத்தில் அவரை போலீசார் இழுத்து சென்றனர்.

இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைய முயன்றதாக அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் லிங்கேஸ்வரன் எங்கே உள்ளார் என்பது வெளியுலகிற்கு தெரிவிக்கப்படவில்லை.

ஆட்கொணர்வு மனு

ஆட்கொணர்வு மனு

இந்த நிலையில், நேற்று இரவு 10.15 மணிக்கு ஹைகோர்ட்டு விடுமுறை கால நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோரது வீட்டிற்கு சென்று, சசிகலா புஷ்பாவின் வக்கீல்கள் அவசர ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த வழக்கு சசிகலா புஷ்பா சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

தாக்குதல்

தாக்குதல்

அந்த மனுவில், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு பெறுவதற்காக என் கணவர் லிங்கேஸ்வரன் திலகம் மற்றும் சிலர் அக்கட்சியின் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கிருந்த சிலர், என் கணவரையும் அவருடன் சென்றவர்களையும் கொடூரமாக தாக்கினார்கள். இதில் படுகாயமடைந்த என் கணவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி போலீசார் அழைத்து சென்றனர். ஆனால், அதன்பின்னர் என் கணவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கைது செய்ததாக தகவல்

கைது செய்ததாக தகவல்

இந்த மனு இன்று காலையில் ஹைகோர்ட்டில் வைத்து விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தபோது, தமிழக அரசு வக்கீல் ஆஜராகி, "லிங்கேஸ்வரன் திலகத்தை போலீசார் கைது நேற்று கைது செய்தனர். இன்று காலை 9.30 மணிக்கு அவர் ஜாமீனில் விடுவிக்கப் பட்டார். அவரை வெளியில் விட்டால், ஏதாவது பிரச் சினைகள் ஏற்படும் என்ப தால் அவரை போலீசார் பிடித்து வைத்திருந்தனர். தற்போது அவரை விடு வித்து விட்டதால், இந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

தாக்கியவர்கள் மீது நடவடிக்கை

தாக்கியவர்கள் மீது நடவடிக்கை

ஆட்கொணர்வு மனு காரணமாக லிங்கேஸ்வரன் கைது செய்யப்பட்ட தகவல் வெளியுலகத்திற்கு தெரியவந்தது. காவல் நிலையத்தில் வைத்து அவர் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் கோபத்துடன் கூறுகிறார்கள். அதேநேரம், அவரை பலரும் பார்க்க தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

English summary
Sasikala Pushba's husband Lingeswaran had been under arrest, says Tamilnadu police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X