சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்து...5 வீடுகள் தரைமட்டம் - 3 பேர் பலி
சாத்தூர் அருகே தாயில்பட்டியில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டு 2 பெண்களும் ஒரு சிறுவனும் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர்: தாயில்பட்டியில் அரசு அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்தபோது நிகழ்ந்த விபத்தில் 5 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதில் 2 பெண்கள், ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு காவல்துறையினரும், வருவாய்துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ஏராளமானோர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
கொரோனா லாக்டவுன் காரணமாக மூடப்பட்டிருந்த பட்டாசு ஆலைகள் கடந்த ஒரு வார காலமாக செயல்படத் தொடங்கியுள்ளன. வீடுகளிலும் கருந்திரி, பட்டாசுகள் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தாயில்பட்டி கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் சூர்யா வயது 25 இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார் இந்நிலையில் இன்று காலை பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் அவரது வீடு தரைமட்டம் ஆனது மேலும் அருகருகே இருந்த மூன்று வீடுகள் தரைமட்டம் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி செல்வமணி என்பவரும் மற்றொரு பெண்ணும் உயிரிழந்தனர்.
வீட்டின் உரிமையாளர் சூர்யா வயது 25 பிரபாகர் மற்றும் அன்னபாக்கியம் ஆகிய மூவர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த உடன் சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா என தேடி வந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த ரபியாசல்மான் என்ற 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அந்த வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. வருவாய் துறை அதிகாரிகளும் விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நிகழ்ந்த வெடி விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே பட்டாசு தயாரித்த போது நிகழ்ந்த வெடி விபத்தில் செந்தில் என்பவரின் வீடு சேதமடைந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications