சிதம்பரம் அருகே நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த பள்ளி மாணவி: பலாத்காரம் செய்து கொலையா?
சிதம்பரம்: சிதம்பரம் அருகே நிர்வாண நிலையில் பள்ளி மாணவி ஒருவர் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். திடலில் இருக்கும் ஓடையில் கடந்த 10ம் தேதி 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு உடல் நிர்வாண நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலுக்கு அருகே பள்ளிப்பை, சீருடை, இரண்டு செட் சுடிதார், காலணி ஆகியவை கிடந்தன. பையில் இருந்த ரப்பரில் செல்வி, 10ம் வகுப்பு என்று எழுதி இருந்தது.

உடலை கைப்பற்றிய போலீசார் அதை பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடையில் நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள தையல்காரரின் முகவரி அடங்கிய துணி இருந்தது. அதை வைத்து அந்த தையல்காரரிடம் விசாரித்தபோது சிறுமி யார் என்று தெரியாது என கூறிவிட்டார்.
இதனால் சிறுமியை அடையாளம் காண்பது கடினமாகியுள்ளது. இந்நிலையில் அவரை புகைப்படம் எடுத்து அதை பல்வேறு காவல் நிலையங்களுக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
சிறுமியை யாராவது காதலித்து இங்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா அல்லது யாராவது கடத்தி வந்து சீரழித்து கொலை செய்தார்களா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறுமியின் கழுத்து எலும்பு முறிந்துள்ளதால் அவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.