For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10ம் வகுப்பு தேர்வு.. மாநில அளவில் 2வது இடத்தைப் பிடித்த பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் மகள்!

Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி மாணவி கனிமொழி 498 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் 2 ஆம் இடம் பெற்றுள்ளார்.

அவரது தந்தை அப்பள்ளியிலேயே வாகன ஓட்டுநராக உள்ளார். மாணவி கனிமொழியின் தந்தை பெயர் கணேசன்.

மகள் படிக்கும் ஏ.கே.டி. பள்ளியிலேயே பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். தாயார் பெயர் செல்வி. குடும்ப தலைவி.

School van driver’s daughter topper in SSLC exam

பெற்றோரும், ஆசிரியர்களும்:

தன்னுடைய வெற்றி குறித்து கனிமொழி, "நான் இந்த அளவுக்கு மதிப்பெண் எடுத்து மாநில அளவில் 2 ஆம் இடம் பிடித்திருப்பதற்கு எனது பெற்றோரும் ஆசிரியர்களுமே காரணம்.

காலை 5 மணி முதல் படிப்பு:

நான் தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து படிப்பேன். என்னை சரியான நேரத்துக்கு எனது பெற்றோர் எழுப்பி விட்டுவிடுவார்கள்.

படிப்பதற்கு ஊக்கம்:

நன்றாக படிக்க வேண்டும் என அவர்கள் என்னை உற்சாகப்படுத்தினர். தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.

சாதனைக்கு காரணம்:

அதேபோல் பள்ளியிலும் ஆசிரியர்கள் மிகவும் உற்சாகப்படுத்தி உதவிகளை செய்தனர். தினமும் மாலை 7 மணி வரை பள்ளியிலேயே தங்க வைத்து படிக்க வைத்தனர். இதனால்தான் இந்த சாதனையை செய்துள்ளேன்.

ஏழை மக்களுக்கு சேவை:

நான் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவள். கஷ்டப்பட்டு படித்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பது எனது லட்சியம். அதன்பிறகு டாக்டருக்கு படித்து ஏழை மக்களுக்கு சேவை செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
SSLC topper student from Kallakuruchi was a daughter of the same school van driver.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X