கொள்கையே இல்லாத அரசியல் பாவம் என்பது காந்தியின் சித்தாந்தம்: ரஜினி மீது சீமான் பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கொள்கையே இல்லாத அரசியல் பாவம் என்பதுதான் காந்தியின் சித்தாந்தம் என ரஜினிகாந்தை கடுமையாக சாடியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார் சீமான். ரஜினியை எதிர்த்து தீவிரமாக அரசியல் செய்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் சீமான்.

Seeman Slams Rajinikanth

ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். இன்று இரவு 9 மணிக்கு இந்த பேட்டியை நியூஸ்18 டிவி சேனல் ஒளிபரப்பு செய்கிறது.

இந்நிகழ்ச்சியின் புரோமோவில் சீமான் தெரிவித்திருக்கும் கருத்துகள்:

அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்... சரபோஜிகள் படையெடுத்து வந்து எங்கள் பாட்டன் முப்பாட்டன்களை தோற்கடிச்சு எங்ககிட்ட அதிகாரம் செலுத்தியிருக்கலாம். அதுவே எங்களுக்கு ஒரு அவமானம்.

கொள்கை என்ன என்று கேட்டாலே அப்படியே ஆடிவிட்டேன் என்று ரஜினியே சொல்கிறார். கொள்கை இல்லாத அரசியல் பாவம் என்கிறார் காந்தி.

காந்தி சொன்ன 10 பாவங்களில் முதல் பாவமே கொள்கை இல்லாத அரசியல்தான்.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் தமது அரசியல் பிரவேசத்தை அறிவித்திருந்த ரஜினிகாந்த், தம்மிடம் செய்தியாளர் ஒருவர் கொள்கை என்ன என்று கேட்டார். தமக்கு அப்படியே தலை கிறுகிறுத்து போய்விட்டது. சின்னப் பசங்க என கிண்டலடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Naam Tamilar Katchi chief coordinator Seeman has slammed that Rajinikanth for his political entry.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற