For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு சீமான் ஆறுதல்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூக்குக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் உயிருக்கு உலை வைக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் செவ்வாய்க்கிழமை போராட்டம் 100-ஆவது நாளை எட்டியது.

Seeman visits Tuticorin Government Hospital

இதையடுத்து மக்கள் கலெக்டர் வெங்கடேஷை நேரில் சந்தித்து மனு அளிக்க சென்றனர். அப்போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த படுகொலையால் தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களை ஸ்டாலின், கமல், முத்தரசன், டி,ராஜேந்தர், திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அந்த வகையில் சீமானும் நேற்றைய தினம் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

English summary
Naam Tamilar party organiser Seeman visits Tuticorin Government hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X