நான் கர்ப்பம்... படுபயங்கர கவர்ச்சி போட்டோ போட்டு சொன்ன செரீனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம் கர்ப்பமாக இருப்பதாக கவர்ச்சிகரமான போட்டோ போட்ட விளையாட்டு வீராங்கனை செரினா வில்லியம்ஸுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

பிரபல டென்னிஸ் வீராங்கனையும் சமீபத்தில் 23வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற வீராங்கணையுமான செரீனா வில்லியம்ஸ் தான் கர்ப்பமாக இருப்பதாக ஸ்நாப் சாட்டில் ஒரு போட்டோவைப் போட்டார். மஞ்சள் நிற பிக்கினியில் கண்ணாடி முன் நின்று படு செக்சியாக போஸ் கொடுக்கும் அந்த போட்டோவில் '20 வாரங்கள்' என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

 Serena Williams Won A Grand Slam While Pregnant, Twitter Is So Impressed

நேற்று புகைப்படம் வெளியான இந்த புகைப்படத்தை சில நிமிடங்களிலேயே செரீனாவே டெலீட் செய்துள்ளார். அதற்குள்ளாக அந்த படத்தை 21 ஆயிரம் பேர் ரீ டுவீட் செய்து விட்டனர்.

இந்நிலையில் செரீனா கர்ப்பமாக இருப்பது உண்மை தான் என்று ஈஎஸ்பிஎன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 35 வயதான செரீனா வில்லியம்ஸ் தான் ரெட்டிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஒஹானியனுடன் திருமண உறவில் இணைந்துள்ளதாக கடந்த டிசம்பரில் குறிப்பிட்டிருந்தார்.

செரீனா தற்போது 20 வாரம் கர்ப்பம் என்று கூறியிருப்பதால் அவர் ஜனவரி மாதம் நடைபெற்ற கிராண்ட் ஸ்லாம் போட்டியின் போது 8 வாரம் கர்ப்பமாக இருந்திருக்கக் கூடும் என்று அவரது ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 Serena Williams Won A Grand Slam While Pregnant, Twitter Is So Impressed

அதே சமயம் தாங்கள் கர்ப்பமாக இருந்த போது எழுந்திருக்க கூட முடியாமல் தவித்த நிலையில் செரீனா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றிருப்பது பாராட்டிற்குரியது என்று பெண்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ace tennis player and winner of 23 Grand Slam titles Serena Williams hinted at her pregnancy on Snapchat
Please Wait while comments are loading...