கோவையில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை.. போஸ்கோ சட்டத்தில் இளைஞர் கைது

Posted By: T Nandhakumar
Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் 15 வயது சிறுமியை அமிலம் வீசிவிடுவதாக மிரட்டி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த கூலி வேலை செய்து வந்த 32 வயதான நபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை போத்தனூர் கருணாநிதி நகர், பகுதியை சேர்ந்தவர் குமார் 32. ஊட்டியை சேர்ந்த இவர், அதே பகுதியிலுள்ள 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதேபோன்று சிறுமி மீது அமிலம் வீசிவிடுவதாக கூறி வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் எல்லாம் தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்திருக்கிறார் குமார்.

Sexual Abuse In Coimbatore And Youth Arrest

தற்போது அந்த பெண் கர்ப்பமானதை அறிந்த பெற்றோர்கள், சம்பவம் தொடர்பாக கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The police arrested a person under the Posco Act for raped the girl and sexually abused.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற