என்னைய கூப்புடுவியா... அத்துமீறிய மேனேஜரை செருப்பால் அடித்து விளாசிய பெண் - வைரல் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அலுவலகத்தில் வேலைக்கு சென்ற பெண்ணை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து படுக்கைக்கு கூப்பிட்ட மேனேஜரை செருப்பால் அடித்து விளாசியுள்ளார் அந்த பெண். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

என்னைய கூப்பிடுவயா? உனக்கு கூடப்பிறந்த அக்கா தங்கச்சி இல்லையா என்று கேட்டுக்கொண்டே அந்த பெண் செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

 Sexual harassment - woman beats manager

பணிபுரியும் இடங்களில் 65 சதவிகித பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு ஏற்படும் கொடுமை குறித்து பலரும் புகார் அளிப்பதில்லை. மீறி எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்களுக்கு பணி பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுகிறது. இந்த நிலையிலேயே தன்னை தவறான கண்ணோட்டத்தோடு பார்த்த நபரை செருப்பால் அடித்து விளாசியுள்ளார்.

வீட்டு சூழல் காரணமாக கடும் சிரமத்திற்கு இடையே பெண்கள் பணிக்கு வந்தாலும் காம இச்சையோடு பார்க்கும் பல கொடூரர்களுக்கு இதுபோன்ற தண்டனை அவசியம்தான் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Woman has beaten Manager of Sexual harrasment in Tamil. If the streets of the country are unsafe for women, the situation in the workplace is not encouraging either.
Please Wait while comments are loading...