For Quick Alerts
For Daily Alerts
சிறுவாணி அணைக்கட்டு நிரம்பியது: கோவை மக்கள் மகிழ்ச்சி

கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிறுவாணி அணையில் 650 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கலாம். இந்த நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பிவிட்டது. இதனால், அணையின் மூன்று மதகுகள் வழியாகவும் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்பகுதிகளுக்கு சிறுவாணி அணை தண்ணீர்தான் முக்கியமான குடிநீர் ஆதாரம் ஆகும்.