அதிகம் படித்த ஆண்கள் இருக்கும் மாவட்டம் எது தெரியுமா.. 2011 சென்சஸ் சொல்றத பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை விட அதிக அளவில் கல்வியறிவு வளர்ச்சி அடைந்துள்ளது.

2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற ஆண்களின் படிப்பறிவு விகிதம் கண்டறியப்பட்டது. அதன்படி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் கல்வியறிவில் முதல் இடத்தை பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக பார்த்தால் ஆண்களின் கல்வியறிவு 86.81 சதவீதமாக உள்ளது. இதில் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஆண்களின் கல்வியறிவு 82.08 சதவீதமாகவும், நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஆண்களின் கல்வியறிவு 91.82 சதவீதமாகவும் உள்ளது.

முதலிடம்

முதலிடம்

இதில் அனைத்து மாவட்டத்தையும் என்று எடுத்துக் கொண்டால், கன்னியாகுமரி மாவட்டமே 93.86 சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளது. 93.47 சதவீதம் பெற்று சென்னை 2வது இடத்திலும், 92.15 சதவீதம் பெற்று நீலகிரி மாவட்டம் 3வது இடத்திலும் உள்ளது.

கடைசி இடம்

கடைசி இடம்

ஒட்டு மொத்த மாவட்டத்தையும் எடுத்துக் கொண்டால் தர்மபுரி மாவட்டம் 69.16 சதவீதம் கல்வியறிவு பெற்று கடைசி இடத்தில் உள்ளது. அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டம் 79.65 சதவீதம் பெற்று தர்மபுரி மாவட்டத்திற்கு சற்று முன்பாக உள்ளது.

நகர்ப்புறம்

நகர்ப்புறம்


இதே போன்று, நகர்ப்புற ஆண்கள் பெற்ற கல்வியறிவு விகிதத்தில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் தலா 94.17 சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளன. 94.15 சதவீதம் எடுத்து கன்னியாகுமரி 2வது இடத்திலும், 94.08 சதவீதம் பெற்று நாகப்பட்டினம் 3வது இடத்தை பிடித்துள்ளது. இதிலும் தர்மபுரி மாவட்டம் 78.17 சதவீதம் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

கிராமப்புறம்

கிராமப்புறம்

நகர்ப்புற ஆண்களின் கல்வியறிவு விகிதத்தைப் போன்றே கிராமப்புற ஆண்கள் படிப்பறிவும் தனியாக பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி, 92.49 சதவீதம் ஆண்கள் கல்வியறிவு பெற்று கன்னியாகுமரி மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக நீலகிரி மாவட்டம் 89.87 சதவீதம் எடுத்து இரண்டாவது இடத்திலும், 88.85 சதவீதம் எடுத்து தூத்துக்குடி மாவட்டம் 3வது இடத்திலும் உள்ளது. இதிலும் 67.3 சதவீதம் பெற்று தர்மபுரி மாவட்டமே கடைசி இடத்தில் உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
2011 census has revealed that Sivagangai and Pudukottai district’s men are top in education. The last place is Dharmapuri District.
Please Wait while comments are loading...