சிவகாசியில் 5வது நாளாக பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டம்... ரூ.60 கோடி நஷ்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: சிவகாசியில் 5வது நாளாக பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் நீடிப்பதால் ரூ. 60 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுமார் 450 தொழிலாளர்கள் பணி இழந்துள்ளனர்.

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக் கோரி 2015ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் கூடுதலாக புதிய மனுவை மனுதாரர்க்ள தாக்கல் செய்துள்ளனர்.

Sivakasi fireworks manufacturers were continuing their indefinite strike

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதன் எதிரொலியாக பட்டாசுக்கு தடை விதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் வெளி மாநில பட்டாசு உற்பனையாளர்கள் சிவகாசி உற்பத்தியாளர்களிடம் கொள்முதலை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு தளர்வு கோரி சிவகாசியில் 5 நாட்களாக தொடர் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. 5வது நாளாக போராட்டம் நீடிப்பதால் 450 தொழிலாளர்கள் பணியில்லாமல் தவிக்கின்றனர். சுமார் 950 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் ரூ 60 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sivakasi fireworks manufacturers were continuing their indefinite strike demanding relaxation of crackers from environment pollution which affects their livelihood.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற