செங்கல்பட்டு, ஆம்பூரில் லேசான நில அதிர்வு.. கர்நாடகா விஜயபுராவிலும் அதிர்ச்சி.. மக்கள் பீதி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரத்தை மையமாக வைத்து இன்று காலையில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. காலை 7.30 மணியளவில் கர்நாடகா மாநிலம் விஜயபுராவிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
செங்கல்பட்டில் உள்ள மகேந்திரா வேர்ல்ட் சிட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள அஞ்சூர், புளிப்பாக்கம், பரனூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு இன்று காலையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக கர்நாடகா மாநிலம் விஜயபுராவில் காலை 6.58 மணிக்கு 3.2 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழ்நாட்டில் செங்கல்பட்டிலும், ஆம்பூரிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
Earthquake of Magnitude:3.2, Occurred on 08-12-2023, 07:39:22 IST, Lat: 12.50 & Long: 79.85, Depth: 10 Km ,Location: Chengalpattu, Tamil Nadu, India for more information Download the BhooKamp App https://t.co/W5OwSbf8cL@Indiametdept @ndmaindia @Dr_Mishra1966 @KirenRijiju pic.twitter.com/irkQDHzPYD
— National Center for Seismology (@NCS_Earthquake) December 8, 2023
காலை 7.39 மணிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு 3.2 ரிக்டர் அளவு கோலில் பதிவானது. செங்கல்பட்டை அடுத்து ஆம்பூர், திருப்பத்தூர், வாணியம்பாடியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு காரணமாக அதிர்ச்சி அடைந்த மக்கள் வீட்டில் இருந்து வெளியே ஓடினர். நிலநடுக்கத்திலும் பொருள் சேதங்களும் உயிர் சேதங்களும் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் நேபாளம், ஆப்கானிஸ்தான், உத்தகாண்ட் மாநிலத்தில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் இன்றைய தினம் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. லேசான நில அதிர்வு என்பதால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications