• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எஞ்சாமிய்யா ராமு.. எப்படியாவது கண்டுபுடிங்க.. வினோத அறிவிப்புடன் ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டிய முருகன்

|

பொதுவா காணவில்லைன்ற போஸ்டர பார்த்தா நமக்கு ஒருவித ஃபீலிங் வரும். காணாம போனவங்களை நெனச்சும், அவங்க இல்லாம வாடும் சொந்தங்கள நெனச்சும் ஃபீல் பண்ணுவோம் . சென்னைய அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் சுற்றுவட்டாரத்துல ஒட்டியிருக்குற, காணவில்லை போஸ்டர்ல ஒரு ஆட்டு கிடாவோட படம் இருக்கு.

இத பார்த்து, பல பேரு கடந்த சில நாளா ஆச்சர்யமா பேசிக்கிட்டு இருக்காங்க. அந்த போஸ்டர்ல காணவில்லைன்ற தலைப்புல நான் பெற்றெடுக்காத பிள்ளை கே.எம்.ராமுன்னு போட்டு, ஒரு ஆட்டு கிடாவோட படம் இருக்கு. ஆமாங்க காணாமல் போயிருக்கிறது கே.எம்.ராமுன்ற ஆட்டு கிடா.

இந்த கிடாவை தேடி தான் அதோட உரிமையாளர் ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்காரு. போஸ்டர் ஒட்டினது விஷயமில்லை. அதுல அவர் சொல்லியிருக்கிற விஷயம் தான் வினோதமா இருக்கு.

அதென்ன உங்க ராணுவம்... ஒட்டுமொத்த தேசத்துக்குமே சொந்தம்... மோடிக்கு அமரீந்தர் சிங் 'குட்டு/' அதென்ன உங்க ராணுவம்... ஒட்டுமொத்த தேசத்துக்குமே சொந்தம்... மோடிக்கு அமரீந்தர் சிங் 'குட்டு/'

தியாக மனப்பான்மை

தியாக மனப்பான்மை

அந்த போஸ்டர்ல, K.M.ராமு இவன் பத்து ஆண்டுகளா ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட கடான்னு சொல்லியிருக்காரு, அந்த கிடாவ வளர்த்த K.முருகன் என்கிற கணக்கு. ராமு காணாம போனதிலிருந்து தனக்கு உயிர் கொஞ்சம் கொஞ்சமா போயிட்டு இருக்கிறதாவும், என் மகன் ராமுவை பத்தி தகவல் சொன்னாலோ, கண்டுபிடிச்சு கொடுத்தாலோ ரூ.25 ஆயிரம் சன்மானம் தர்றதாவும் சொல்லியிருக்காரு. இதுல வினோதம் என்னன்னா.. சன்மானம் மட்டும் தர்றதா சொல்லல முருகன். இன்னும் ஒருபடி மேலே போய், என் மகன (கிடா ராமுவை) எப்படியாவது கண்டுபிடிச்சு தந்தா, தன் உடம்புல இருந்து எந்த பாகத்தை தானமா கேட்டாலும் தர்றேன்னு சத்தியம் பண்ணியிருக்காரு. இப்ப தெரியுதா மக்கள் ஏன் அந்த போஸ்டர பாத்து ஆச்சர்யமா பேசிகிட்டாங்கன்னு.

செல்லம் ராமு

செல்லம் ராமு

சிங்கப்பெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தான் கே.முருகன். இவர், கடந்த 9 வருஷமா ரொம்ப பாசமா தன் பிள்ளைகள விட செல்லமா கிடா ராமுவை வளர்த்துருக்காரு. தூங்கும் போது கூட ராமு பக்கத்துல தான் படுப்பாரு. கொஞ்ச நாளுக்கு முன்ன, கிடா ராமு திடீர்னு மாயமாக முருகன் ரொம்ப உடைஞ்சிட்டாரு. முருகன் மட்டும் இல்ல, அந்த ஏரியா வாசிகளே மிகவும் சோகமாயிட்டாங்க.

நினைத்து கதறும் முருகன்

நினைத்து கதறும் முருகன்

காரணம் 9 வருஷத்துக்கு மேலா அந்த ஏரியால ரொம்பவும் பிரபலமா இருந்துருக்கான் ராமு. அவன பாத்துட்டு போனாலே அவ்ளோ நல்லது நடக்கும். அவன் தலையில கை வச்சு வேண்டிக்கிட்டா நெனச்சது நடக்கும்னு சொல்றாங்க ஏரியா ஜனங்க. கல்யாணம் ஆகாதவங்க, கல்யாணமாகி குழந்தை இல்லாதவங்க, நோய்வாய்ப்பட்டு கஷ்டபட்றவங்கன்னு பலரோட வாழ்கையில ராமுவால நல்லது நடந்துருக்குன்னு சொல்றாங்க. மொத்தத்துல அந்த ஏரியாவுக்கே சாமி மாதிரி வலம் வந்துருக்கான் ராமு. அவன் காணாம போனதால தன் உயிர்ல பாதி போயிட்டதா புலம்பி கதறி அழுதுகிட்டு இருக்காரு முருகன்.

தவித்த முருகன்

தவித்த முருகன்

ராமு காணாமல் போன அதிர்ச்சியும், வேதனையும் தாங்க முடியாம மறைமலைநகர் போலீஸ்கிட்ட புகார் சொல்லியிருக்காரு. அவங்க என்ன சொல்லியிருப்பாங்கன்னு நமக்கு தெரியாதா ? கரெக்ட் அதே தான்.. காணாம போற மனுசங்களையே கண்டுபிடிக்க முடியாம இருக்கோம். இதுல உன் கிடாய எங்க போய் தேடன்னு சொன்னதும், மனுசன் வேதனையோட உச்சத்துக்கே போயிட்டாரு. ஆசை ஆசையா வளர்த்த ராமுவை எப்படியாவது கண்டுபுடிச்சிடலாம்னு நம்பிக்கை காவல்துறையோட பதிலால கொறஞ்சு போச்சு அடுத்து என்ன பண்றதுன்னு வழி தெரியாம தவிச்சு நின்னாரு

மக்களின் ரியாக்சன்

மக்களின் ரியாக்சன்

அப்புறம் தான் போலீஸ நம்பி பலனில்லன்னு, ராமுவை பத்தின தகவலோட ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சி ஒட்டிட்டாரு. போஸ்டர பாத்த சில பேர் முருகனோட சேர்ந்து ராமுவை தேடிகிட்டு இருக்காங்க. போஸ்டர பார்த்த ஒவ்வொருத்தருமே பேசிகிட்ட விஷயம் நம்மாள உதவ முடியாட்டாலும் ராமு சீக்கிரம் அவருக்கு கெடச்சிரணும். ராமு கெடச்சா உறுப்பு தானம் பண்ண ரெடின்னு சொல்லியிருக்காருன்னா, எவ்வளவு பாசத்தோட வளர்த்திருப்பாரு அந்த கிடாவ..

அவதாரம் அவன்

அவதாரம் அவன்

நமக்கும் அதே கேள்வி வந்துச்சு. சரின்னு அவர தொலைபேசில தொடர்பு கொண்டு பேசினப்போ, இன்னும் ராமு காணாம போன வருத்தத்துல இருந்து மனுசன் மீள முடியாம தவிக்கிறது தெரிஞ்சுது. ஆடுன்னு சொல்லாதீங்க தயவு செஞ்சு ராமுன்னு சொல்லுங்கன்னு சொல்றாரு அழுகை கலந்த விம்மலோட. என் பெத்த பிள்ளைகளுக்கு ஏதாவது ஆனா கூட நா இவ்ளோ கவலபட மாட்டேன்.என் ராமு அதுக்கும் மேலன்னு சொல்லி வருத்தப்பட்டாரு. அவன் ஊருக்கே சாமி மாதிரி இருந்தான். அவனுக்கு இப்போ 9 முடிஞ்சு 10 வயசாக போது.. அவன் 26 வயசு வரைக்கும் உயிரோட இருப்பான். அவன் சாமியோட அவதாரம்னு அடுக்கடுக்கா ராமுவின் பெருமைய சொன்னாரு. தவிர இந்த விவகாரத்த இத்தோட விடப்போறதில்லை கமிஷனர் லெவலுக்கு கொண்டு போக போறேன். என்ன தான் நடக்குதுன்னு பாத்துட்றேன்னு தன்னோட வேதனைய கொட்டி தீத்துட்டாரு. உண்மைய சொன்னா வேதனைய கொட்டினாரு.. ஆனா தீர்க்கல

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

ராமு கெடச்சா தான் அவர் வேதனை தீரும், இது தான் உண்மை. மனுசனுக்கு மனுசன் மரியாதை கொடுக்காத இந்த காலத்துல, ஆட்டு கிடா மேல வெறித்தனமா பாசம் வச்சிருக்கிற முருகனோட வெள்ளந்தி மனசு, ராமு திரும்ப வந்துட்டான்ற செய்தி கேட்டு பழையபடி உற்சாகமா ஆகனும்னு நாமளும் வேண்டிப்போம்.

English summary
We have a sad feeling when seeing a missing poster but here Many people have seen a poster and Weird talking about past few days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X