For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு மருத்துவமனைகளில் யோகா, மசாஜ் சிகிச்சை... விரைவில் அறிமுகம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் யோகா மற்றும் இயற்கை சிகிச்சை மையம் ரூ.9 கோடியே 60 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது.

மாறிவரும் உணவுப் பழக்கத்தினாலும், அவசர கதியினாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். வருகின்றன.

Soon, Lifestyle Clinics to Be Opened in TN Government Hospitals

இந்த மன அழுத்தத்தைபோக்கவும், மன அழுத்தம் வராமல் தடுக்கவும் யோகா கலை உதவுகிறது. தினமும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் பலர் யோகா மற்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கைத்தர சிகிச்சை மையம் தேவைப்படுகிறது. அனைவராலும் அதிக பணம் செலவு செய்து இவற்றை பெற முடிவதில்லை.

இதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாடு சட்டசபை விதி 110ன் கீழ் ஒரு அறிவிப்பில் ரூ.9 கோடியே 60 லட்சம் செலவில் அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கைத்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இந்த யோகா மற்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கைத்தர சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது.

18 மருத்துவக்கல்லூரிகளிலும் ஒரு உதவி மருத்துவர் உள்ளிட்ட 4 பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மையம் அமைக்க நோயாளிகள் அறை, யோகா அறை ஆகியவறை அமைக்கப்படுகிறது. மேலும் நீர்வழி சிகிச்சை, மண்வழி சிகிச்சை, காந்த சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, கலர் சிகிச்சை, மின் சிகிச்சை, அக்குபஞ்சர் சிகிச்சை, தேக பயிற்சி சிகிச்சை ஆகியவையும் அளிக்கப்பட உள்ளது.

இதுபோன்ற வசதி அனைத்தும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் அமைக்கப்பட உள்ளது.

English summary
Need a mud-pack to cleanse your pores? Or some muscle-relaxing time in a steam sauna? Move over high-end wellness spas. You may soon be able to get your wellness fix at the closest State-run medical college and hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X