For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

64 பேரிடம் கோடிக்கணக்கில் சுருட்டல்.. புது கார் புது பங்களா.. ஓஹோ வாழ்க்கை.. அடேங்கப்பா ஷோபியா

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 3 கோடியை ஏமாற்றிய பெண்ணை சிதம்பரம் போலீஸார் கைது செய்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    74 பேரிடம் கோடிக்கணக்கில் சுருட்டல்...அடேங்கப்பா ஷோபியா- வீடியோ

    சிதம்பரம்: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 74 பேரிடம் இருந்து ரூ. 3 கோடி மோசடி செய்த ஷோபியாவை போலீஸார் கைது செய்தனர்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் உளூந்தூரைச் சேர்ந்தவர் இளந்தீபன் (33). இவர் இந்திய உணவு கழகத்தில் பணிக்காக முயற்சித்து கொண்டிருந்தார். இதை அறிந்த சிதம்பரம் சிலுவைபுரத்தை சேர்ந்த ஷோபியா (32) என்பவர் தான் இந்திய உணவு கழகத்தில் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறி அதற்கான அடையாள அட்டையை காண்பித்தார்.

    மேலும் ரூ. 5 லட்சம் கொடுத்தால் போதும் இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ஷோபியா கூறினார். இதை உண்மை என்று நம்பிய இளந்தீபன் அரசு வேலை கிடைக்கும் என்ற ஆசையால் ரூ. 3 லட்சத்துக்கு 50 ஆயிரத்தை ஷோபியாவிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட ஒரு வாரத்தில் பணி நியமன ஆணையை இளந்தீபனிடம் கொடுத்தார்.

    ஆணை

    ஆணை

    அந்த ஆணையுடன் இளந்தீபன் சம்பந்தப்பட்ட அலுவலகத்தை அணுகியபோதுதான் அது போலியானது என்று இளந்தீபனுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளந்தீபன் சிதம்பரம் போலீஸில் புகார் அளித்தார்.

    மோசடி

    மோசடி

    இதுதொடர்பாக போலீஸார் விசாரணையில் பல திடுக் தகவல்கள் தெரியவந்துள்ளன. ஷோபியாவும் அவரது தாய் ஆரோக்கியசெல்வியும் (50) பல இளைஞர்களிடம் இருந்து பல லட்சங்களை வாங்கிக் கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது.

    தாயும் கைது

    தாயும் கைது

    இந்நிலையில் கடலூரில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருந்த ரவிச்சந்திரன் (33) என்பவருடன் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆரோக்கியசெல்வியும், ரவிச்சந்திரனும் கடந்த 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். ஷோபியா தலைமறைவானார்.

    74 பேரிடம் மோசடி

    74 பேரிடம் மோசடி

    இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் கடலூர் செம்மண்டலத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஷோபியாவை கைது செய்தனர். அப்போது விசாரணை பல தகவல்கள் கிடைத்தன. ஷோபியா மொத்தம் 74 பேரிடம் இருந்து ரூ.3 கோடிக்கு மேல் பணம் பெற்றுள்ளது தெரியுவந்தது.

    ஆட்களை வைத்து மிரட்டுவது...

    ஆட்களை வைத்து மிரட்டுவது...

    பணம் கொடுப்பவர்களுக்கு பணி நியமன ஆணையை தருவதும் போலி ஆணை என தெரிந்ததும் பணம் கேட்போரை அடியாட்களை வைத்து மிரட்டுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். பெற்ற பணத்தில் ஒரு பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். புதிய கார், புதிய இரு வீடுகளை கட்டி வருகிறார்.

    English summary
    Chidambaram Sophia who claims her to be working in Food Corporation of India was arrested for cheating 74 people by lying to offer government jobs and looted Rs. 3 Crore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X