நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் எந்த கட்சியில்? சு.சாமி பரபரப்பு தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் கோழிக்கோட்டில் நடக்கவுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் செமினாரில் கலந்துகொள்ள உள்ள நிலையில், அவர் மார்க்சிஸ்ட் கட்சியில் சேரப்போவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்ததலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை தன் டுவிட்டர் பக்கத்தில் ஆருடம் போல் கூறிக்கொண்டுள்ளார். இந்நிலையில், நடிகர் கமல் கோழிக்கோட்டில் நடக்கவுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் செமினார் ஒன்றில் பங்கேற்க உள்ளார். அந்தத் தகவலின் பேரில் சுப்பிரமணியன் சுவாமி, கமலை 'பாம்பஸ் இடியட்' என திட்டி, அவர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைவதாக கேள்விப்பட்டேன் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

 Subramanian swamy's latest tweet about kamal

கமல், சில தினங்களுக்கு முன்பு கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கமல் டுவிட்டரில் மிகத் தீவிரமாக அரசியல் கருத்துக்களைக் கூறிக்கொண்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Subramanian Swamy tweeted in his twitter that Kamal is going ti join in CPM!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற