For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹெராயின் வழக்கு: 12 ஆண்டுகளுக்குப் பின் சுதாகரன் விடுதலை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Sudhakaran released on drug case
சென்னை: ஹெராயின் வைத்திருந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனும், சசிகலாவின் அக்காள் மகன் வி.என்.சுதாகரன் உள்பட 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2001-ம் ஆண்டு சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரன் மீது பாண்டிபஜார் காவல்துறையினர் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து சுதாகரன் வீடு மற்றும் அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகம் ஆகியவற்றில் போலீ சார் சோதனை நடத்தியதில் மொத்தம் 88 கிராம் ஹெராயின் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, சுதாகரன், பாஸ்கரன், மொயினுதீன், ஜலாலுதீன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வி.ராம மூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் தாமல்கண்ணாஆஜராகி சாட்சியங் களை விசாரித்தார்.

சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிக்கு மொட்டைக் கடிதம் வந்தது. அந்த கடிதம் உயர் நீதிமன்றபதிவாளர் ஜெனரலிடம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, அதே நீதிமன்றம் வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர், வழக்கை நீதிபதி சி.சின்னப்பன் விசாரித்தார். அவருக்கும் மொட்டைக் கடிதம் வந்தது. அவரும் அதை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பினார். மீண்டும் வழக்கை நீதிபதி சின்னபனையே விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து, நீதிபதி சின்னப்பன் வழக்கை விசாரித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம், சுதாகரன் உள்பட 3 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூறி அவர்களை விடுதலை செய்துள்ளது.

12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தற்போதுதான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Jayalalithaa's foster son Sudhakaran has released on12 years old drug case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X